டாஸ்மாக் வழக்கில்.. இப்போ வந்திருக்கிறது இடைக்கால தடைதான்.. விசாரணை மேலும் நடக்கும்! தமிழிசை ஒரே போடு
சென்னை: ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது என்றும், எனவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடையே தவிர இதற்கு மேலும் விசாரணை நடைபெறும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக அரசு சர்க்காரியா கமிஷனினால் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்பவர்கள் என்ற சர்டிபிகேட்டை பெற்றவர்கள் என்பதை மறக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், டாஸ்மாக் சோதனை வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? என்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கிறது என்று கூறி கோடை விடுமுறைக்கு பின் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழக மக்களின் வரிப்பணம் யார் சுருட்டினாலும் அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடைதான் என்று கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம்... ஆனால் இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருப்பதனால்.. சில சிந்தனைகளை பதிவிடுவது தவறில்லை.
முதலில் அமலாக்கத்துறை.. மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு.. அது தனிப்பட்ட அமைப்பு.. பாஜக ஆளுகின்ற அஸ்ஸாம் ஹிமாச்சல பிரதேஷ் மகாராஷ்டிரா போன்ற இடங்களில் கூட ED ரெய்டுகள் நடந்திருக்கின்றன. டாஸ்மாக்கை பொருத்தமட்டில், இந்த வழக்கின் அடிப்படையே தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 FIR-கள் தான்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னபோது.. உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்து விசாரணை தொடரலாம் என்று சொன்னதன் பேரிலேயே.. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.. தவறான பண பரிவர்த்தனையை தான் அமலாக்கத்துறை விசாரணை செய்து கொண்டு இருந்தது.. ஆக ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடையை தவிர இதற்கு மேலும் விசாரணை நடைபெறும்.
இந்த கருத்துப்பதிவின் நோக்கம், அரசியல் அல்ல. மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் சுரண்டப்படக் கூடாது என்பதுதான். இதை காழ்ப்புணர்ச்சி என்று பார்ப்பதை விட மக்களின் பணத்திற்கு ஆளும் அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் என்ற அடிப்படை தான் இதில் குறிப்பிடப்பட வேண்டும். எது எப்படி இருந்தாலும் இன்று நாம் தமிழக மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
தமிழக மக்களின் வரிப்பணம் யார் சுருட்டினாலும் அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்... இதற்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக அரசு சர்க்காரியா கமிஷனினால் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்பவர்கள் என்ற சர்டிபிகேட்டை பெற்றவர்கள் என்பதை நாம் இங்கே நினைவு கூறுகிறோம்... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, பாஜகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றமே அங்கீகாரம் கொடுக்கிறது. பாஜகவுக்கு இது சம்மட்டி அடி. அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது உச்ச நீதிமன்றம் என்று விமர்சித்து இருந்த நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியிருக்கிறார்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications