Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்.. சுத்த பொய்.. பதறிய பாஜக நடிகை ஜெயலட்சுமி.. சினேகன் வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடலாசிரியர் சினேகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி நிதி வசூலில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாடலாசிரியர் சினேகன் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 'சினேகம் ஃபவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையை அங்கீகரித்து வருமான வரித்துறை 12-AA சான்றிதழையும், வருமான வரி விலக்கையும் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இவரது பெயரில் வேறு ஒரு நபர் ஆன்லைனில் நன்கொடை வசூலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது 'சினேகம் ஃபவுண்டேஷன்' இது இயங்கி வந்திருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த சினேகன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் தவறான முகவரி என நோட்டீஸ் திரும்ப வந்திருக்கிறது.

Court orders in BJP actress Jayalakshmis case seeking cancellation of case filed against her by lyricist Snegan

எனவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரித்ததில்தான் அது போலியான முகவரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். ஆனால் இது போலியான குற்றச்சாட்டு என்றும், தன்மீது கலங்கம் ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் நடிகை ஜெயலட்சுமி குற்றம்சாட்டினார்.

மேலும், "இந்த புகார் எவ்வித ஆதராங்களும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான் விசாரணை இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், "சினேகன் பெயரை பயன்படுத்தி தவறாக நன்கொடை பெற்றதாக எவரும் புகார் அளிக்கவில்லை. சினேகம் அறக்கட்டளையின் வங்கி கணக்கு நடப்பு கணக்காகவே உள்ளது.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அறக்கட்டளையை உருவாக்கி சொந்த வருமானத்தில் இருந்தே பெரும் நிதியை செலவிட்டிருக்கிறேன். கடந்த 2018ம் ஆண்டு முதல் தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. இப்படி இருக்கையில் சினேகன் அளித்த பொய் புகாரில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், நற்பெயரை கெடுக்கும் வகையில் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது வரை முதற்கட்ட விசாரணை கூட மேற்கொள்ளவில்லை என்பதால், என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று நடிகை ஜெயலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.

Court orders in BJP actress Jayalakshmis case seeking cancellation of case filed against her by lyricist Snegan

ஆனால் காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி நடிகை ஜெயலட்சுமியின் வாதங்களை மறுத்தார். திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னேற்றம் உள்ளதாகவும், ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி, ஜெயலட்சுமி மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து வழக்கை விசாரணை எதிர்கொள்ள உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+