ஓபிஎஸ் விஸ்வரூபம் எடுப்பார்! அதிமுகவை வழிநடத்துவார்! சண்முகத்தின் ஜம்பம் பலிக்காது! -கோவை செல்வராஜ்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து அதிமுகவை வழிநடத்துவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சட்டதிட்ட விதிகளை பற்றி எதுவும் தெரியாமல் சி.வி.சண்முகம் பேசி வருவதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியை கம்பெனி போல் நடத்த திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என, எடப்பாடி பழனிசாமி ஆதரவு முன்னாள் அமைச்சர் மீது கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

கோவை செல்வராஜ்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கோவை செல்வராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இன்று மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் கட்சியை எடப்பாடி பழனிசாமி அழிப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

சிவி சண்முகம்
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு அதிமுகவின் சட்டதிட்ட விதிகளை பற்றி எதுவுமே தெரியாது என்றும் தனது எம்.பி. பதவியும் பறிபோய்விடும் என்பது கூட தெரியாமல் அவர் இப்படி பேசி வருகிறார் எனவும் கோவை செல்வராஜ் வேதனைத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறோம் எனக் கூறியும், யாரும் வரவேண்டாம், ஊரிலேயே இருங்கள் பார்த்துக் கொள்வோம் என்று ஓபிஎஸ் அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

விஸ்வரூபம் எடுப்பார்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து கட்சியை வழிநடத்துவார் என சத்தியம் செய்யாத குறையாக உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார் கோவை செல்வராஜ். ஆயிரம் சண்முகம் வந்தாலும் அண்ணா திமுகவை கைப்பற்ற முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி ஓ.பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கோவை செல்வராஜ் கடுமையாக விமர்சித்தார்.
Recommended Video

2017-ஆம் ஆண்டு
2017-ஆம் ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரால் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து என்று உணர்ந்த போது அப்போது அமைச்சர்களாக இருந்த 3 பேர் தினமும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று மணிக்கணக்கில் பேசி காலில் விழுந்து அவரை அழைத்து வந்துவிட்டு இப்போது வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் என வேதனை தெரிவித்தார். அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் எல்லாம் பொதுவாழ்க்கையில் மக்களுக்கு என்ன செய்துவிடப் போகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கோவை செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications