கவனம்.. தமிழ்நாட்டில் 84% கொரோனா மரணங்களுக்கு இடையே உள்ள முக்கியம் ஒற்றுமை.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. தினசரி கேஸ்கள் 800க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 27,17,203 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 782 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 9,211 பேர் தமிழ்நாட்டில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 36,324 பேர் தமிழ்நாட்டில் இதுவரை பலியாகி உள்ளனர். 26,71,668 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 6,35,03,437 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின்

வேக்சின்

தமிழ்நாட்டில் இதுவரை 4,27,74,064 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,07,29,373 பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது. 71 சதவிகிதம் பேருக்கு தமிழ்நாட்டில் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

 கொரோனா

கொரோனா

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொரோனா பலியானவர்களின் விவரங்கள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 2011 பேர் பலியாகி உள்ளனர். இதில் 1675 பேர் வேக்சின் போடவில்லை.

பாதிப்பு அதிகம்

பாதிப்பு அதிகம்

அதாவது வேக்சின் போடாத நபர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாதங்களில் பலியானவர்களில் 84 சதவிகிதம் பேர் வேக்சின் போடாத ஆட்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேக்சின் போட்டால் கொரோனா காரணமாக ஏற்படும் மரணம் மொத்தமாக குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு பெரிய அளவில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை.

3.5 மடங்கு அதிகம்

3.5 மடங்கு அதிகம்

தமிழ்நாடு அரசு தகவலின் படி கொரோனா வேக்சின் போடாதவர்கள் வேக்சின் போட்டவர்களை விட 3.5 மடங்கு அதிகம் மரணம் அடையும் வாய்ப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடனடியாக இரண்டு டோஸ் வேக்சின் எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+