தமிழகத்தில் அதிவேகமாக சரியும் கொரோனா கேஸ்கள்.. அதிக பாதிப்பு, உயிரிழப்பில் சென்னை டாப்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கோவையிலும் குறைகிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் இடையில் கொரோனா சற்று ஏற்றம், இறக்கமாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பு சற்று அதிகரிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 26,66,964 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர செங்கல்பட்டில் 2 பேரும், திருவாரூரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,627 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,607 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,14,291 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

கோவையில் குறைவு
17,046 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,51,319 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,63,89,759 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 188 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ளது.
Recommended Video

ஈரோட்டில் அதிகம்
கோவையில் 163 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 107 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், மதுரையில் 35 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 26 பேருக்கும், திருவள்ளூரில் 61 பேருக்கும், திருச்சியில் 53 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 79 பேருக்கும், விருதுநகரில் 19 பேருக்கும், ஈரோட்டில் 95 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும், நாமக்கல்லில் 53 பேருக்கும், தஞ்சாவூரில் 94 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில்
சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications