சென்னையில் மட்டுமல்ல; மற்ற மாவட்டங்களிலும் கொரோனா கிடுகிடு.. எச்சரிக்கும் டேட்டா.. உஷார் மக்களே!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிவேகமாக உச்சத்தில் சென்று வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 5,000-ஐ நெருங்கி விட்டது. அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு 1,700 ஆக இருந்த பாதிப்பு இன்று 4,862 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. 16,577 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் விஷயமாகும்.

சென்னையில் ஆதிக்கம்
தலைநகர் சென்னையில் தினம்தோறும் பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் 2,481 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும்கிட்டத்தட்ட 50%-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனா பாதிப்பு அதிமாக இருப்பதாக நாம் எளிதாக கூறி விட்டு நகர்ந்து விட முடியாது.

மற்ற மாவட்டங்களிலும் அதிகம்
ஏனெனில் சென்னை மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் 596 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. கோவையில் 259, காஞ்சிபுரத்தில் 127, வேலூரில் 184, திருவள்ளூரில் 209, தூத்துக்குடியில் 123 பேருக்கு என பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் 97 பேருக்கு பாதிப்பு என அதிவேமாக உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
திருச்சியில் 50, திருப்பூரில் 80, திருச்சியில் 51, மதுரையில் 52, சேலத்தில் 75, ராணிப்பேட்டையில் 68, விருதுநகரில் 43 பாதிப்புகள் என தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர் என சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு குறைவாக உள்ளது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில்தான் தமிழகத்தில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களின் அலட்சியம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததுதான். பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதையே சுத்தமாக மறந்து விட்டதை காண முடிகிறது. சமூக இடைவெளியும் எங்கே என்பது கேள்விக்குறியாகி விட்டது. எனவே கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற்றுவதன் மூலம்தான் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.












Click it and Unblock the Notifications