சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி

சென்னையில் இன்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே இன்று 3,545 பேர் கொரோனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் இன்று 1187 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே இன்று 3,545 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது என்றாலும் தினசரியும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

Covid 19 Chennai and District updates Today

தமிழகம் முழுவதும் இன்று 5,75,017 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. பல மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

  • சேலம் - 296
  • செங்கல்பட்டு - 259
  • திருவள்ளூர் - 235
  • கடலூர் - 212
  • திருப்பூர் - 118
  • தஞ்சை - 179
  • விழுப்புரம் - 161
  • காஞ்சிபுரம் - 148
  • நீலகிரி - 145
  • திருவாரூர் - 141
  • ஈரோடு - 140
  • வேலூர் - 138
  • திருவண்ணாமலை - 136
  • நாமக்கல் - 134

திருச்சி, கன்னியாகுமரியில் தலா 96 பேருக்கும் தருமபுரியில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லையில் 90 பேர் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+