தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 1,000-ஐ கடந்த கொரோனா.. ஒரே நாளில் 1,087 பேர் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆயிரம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஓரளவு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 500-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தவிர கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

covid 19 crossed 1,000 after 3 months in Tamil Nadu

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும்1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1000-ஐ கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,64,450 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 73,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,86,30, 686 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 72,998 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,83,11,295 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 6,590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 105 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 102 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையிலும், செங்கல்பட்டிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. திருவள்ளூரில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+