சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தப்படும் வீடுகள்.. உயரும் கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் தனிமைப்படுத்துதல் நிகழ்வு சென்னையில் அரங்கேறி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் வீடுகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. சென்னையில் மெல்ல மெல்ல கொரோனா உயர்ந்து வருவது அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மொத்த உலகத்தையும் கொரோனா பெருந்தொற்று தலைகீழாக மாற்றிஉள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன், கொரோனா பாதிப்புக்கு பின் என்று இரண்டு வகையான உலகத்தை பார்க்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்ககளை காவு வாங்கி கொரோனா, பல 100 கோடி மக்களை பாதித்து சென்றுள்ளது. ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தையும் தரைமட்டமாக அழித்துவிட்டும் சென்றுள்ளது.

covid 19 : houses again quarantine is taking place in Chennai

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 2022-ம் ஆண்டுக்குப் பிறகுதான் குறையத் தொடங்கியது. 2022-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவில் முழுவதும் இயல்பு நிலைத் திரும்பியது. சுமார் ழ 80 சதவீதத்துக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.

இந்தநிலையில், கடந்த 10 நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு 4,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-யைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

covid 19 : houses again quarantine is taking place in Chennai

இதனால் அரசு பொது இடங்களில் முக கவசம் அணிந்து வாருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் என்பது ஆஸ்துமா, நீரழிவு நோய், பக்கவாதம் மற்றும் பெரும் உடல் நல பாதிப்பு போன்ற இணைநோய் பாதிப்பு உள்ளவர்களை தாக்கினால் சிக்கலாகி விடும். மீண்டும் பரவ தொடங்கி உள்ள கொரோனாவால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+