தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா..30,000-ஐ கடந்த பாதிப்பு.. இந்த 12 மாவட்டங்கள் மிக மோசம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து நாளுக்கு நாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து இரட்டிப்பாகி வருகிறது. இங்கு மட்டும் 6452 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா ஆதிக்கம்
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,03,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிக உயிரிழப்பு எங்கே?
சென்னையில் அதிகபட்சமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது. செங்கல்பட்டில் 2 பேர் இறந்தனர். காஞ்சிபுரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 37,178 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 23,372 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,71,535 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு
1,94,697 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,47,857 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,94,50,246 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6452 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு தினமும் அதிவேகமாக சென்று வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து ஆறுதல் அளிக்கிறது.

கோவையில் எத்தனை?
செங்கல்பட்டில் 2377 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3886 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 700 பேருக்கும், மதுரையில் 565 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1266 பேருக்கும், திருவள்ளூரில் 1069 பேருக்கும், திருச்சியில் 705 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1014 பேருக்கும், ஈரோட்டில் 1066 பேருக்கும், சேலத்தில் 1080ம் பேருக்கும், நாமக்கல்லில் 704 பேருக்கும், தஞ்சாவூரில் 840 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 196 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 828 பேருக்கும், தூத்துக்குடியில் 351 பேருக்கும், நெல்லையில் 828 விருதுநகரில் 529 பேருக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த 12 மாவட்டங்கள்தான்
செங்கல்பட்டு, சென்னை மற்றும் கோவையில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இது தவிர ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை என மொத்தம் 12 மாவட்டங்களில் பாதிப்பு அதிமாகி நிலைமை மோசமாக உள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications