தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு... ஷாக் அளித்த சென்னை.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது. வழக்கம் போல் சென்னையில் தான் மிகமிக அதிகமாக 510 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 8718 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4882 ஆக உயர்ந்துள்ளது.

covid 19 may 12 report of tamil nadu : district wise abstract of covid 19 positive cases in tamil nadu

20 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. அரியலூரில் 36 பேர், சென்னையில் 510 பேர், செங்கல்பட்டு 35 பேர், கடலூர் ஒருவர், திண்டுக்கல் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 2 பேர், காஞ்சிபுரத்தில் 24 பேர், கன்னியாகுமரியில் ஒருவர், கரூரில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று பெரம்பலூரில் 27 பேர், தென்காசியில் ஒருவர், தேனியில் 7 பேர், திருவள்ளூரில் 27 பேர், திருவண்ணாமலையில் 13 பேர், தூத்துக்குடியில் 2 பேர், திருநெல்வேலியில் 3 பேர், திருச்சியில் 2 பேர், வேலூரில் ஒருவர் , விழுப்புரத்தில் ஒருவர் விருதுநகரில் 4 பேர், விமான நிலைய குவாரண்டைனில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா .. இன்று மட்டும் 8 பேர் மரணம்.. சென்னையில் தான் மோசம் 8718 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 344
  • செங்கல்பட்டு 391
  • சென்னை 4882
  • கோவை 146
  • கடலூர் 396
  • தர்மபுரி 5
  • திண்டுக்கல் 111
  • ஈரோடு 70
  • கள்ளக்குறிச்சி 61
  • காஞ்சிபுரம் 156
  • கன்னியாகுமரி 26
  • கரூர் 52
  • கிருஷ்ணகிரி 20
  • மதுரை 121
  • நாகப்பட்டினம் 45
  • நாமக்கல் 77
  • நீலகிரி 14
  • பெரம்பலூர் 132
  • புதுக்கோட்டை 6
  • ராமநாதபுரம் 30
  • ராணிப்பேட்டை 76
  • சேலம் 35
  • சிவகங்கை 12
  • தென்காசி 53
  • தஞ்சாவூர் 69
  • தேனி 66
  • திருப்பத்தூர் 28
  • திருவள்ளூர் 467
  • திருவண்ணாமலை 105
  • திருவாரூர் 32
  • தூத்துக்குடி 35
  • திருநெல்வேலி 93
  • திருப்பூர் 114
  • திருச்சி 67
  • வேலூர் 34
  • விழுப்புரம் 299
  • விருதுநகர் 44
  • விமான நிலையத்தில் குவாரண்டைனில் 4 பேர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+