சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா .. ஒரே நாளில் 8 பேர் மரணம்.. சென்னையில் தான் மோசம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. ஒவ்வாரு நாளும் 700க்கும்அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 500க்கும் குறைவில்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக இருந்தது, இந்நிலையில் மே 12ம் தேதியான இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் கொரோனா தொற்று தமிழகத்தில் தான் வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா போர்க்களத்தில் செய்தியாளர்கள்.. பரிசாக கிடைத்தது தொற்றுதான்.. அரசும், கட்சிகளும் உதவ கோரிக்கைகொரோனா போர்க்களத்தில் செய்தியாளர்கள்.. பரிசாக கிடைத்தது தொற்றுதான்.. அரசும், கட்சிகளும் உதவ கோரிக்கை

சென்னையில் 510

சென்னையில் 510

தமிழகத்திலேயே இன்று சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 27 பேருக்கும், திருவள்ளூரில் 27 பேருக்கும் திருவண்ணாமலையில் 13 பேருக்கும், தேனியில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத.

இதுவரை 2051 பேர் குணம்

இதுவரை 2051 பேர் குணம்

தமிழகத்தில் செவ்வாய்கிழமையான இன்று மட்டும் 82 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மே 12ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2134 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 6520 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 4093 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

11,632 பேருக்கு சோதனை

11,632 பேருக்கு சோதனை

மே 12ம் தேதியான இன்று மட்டும் 11788 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 266687 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இதுவரை இன்று மட்டும் 11 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,55,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

61 பேர் இதுவரை மரணம்

61 பேர் இதுவரை மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 69 வயது ஆண், 63 வயது ஆண், 43 வயது பெண், 55 வயது பெண் கீழ்பாக்கத்தில் 75 வயது ஆண், 70வயது ஆண், 58 வயது பெண், சென்னை ஸ்டான்லியில் 57 வயது பெண், திருவள்ளூரில் 43 வயது பெண், சென்னையில் தனியார் மருத்துவமனையில் 66 வயது பெண், ஆகியோர் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் ஆவார்கள்

 6520 பேர் சிகிச்சை

6520 பேர் சிகிச்சை

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 716 பேரில் 427 பேர் ஆண்கள், 288 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 5848 ஆண்களும், 2867 பெண்களும், 3 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மே 12 நிலவரப்படி 4401 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 6520 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

English summary
Today 716 covid 19 positive cases in tamil nadu , tottaly rised to 8718 positive cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X