பல கோடி வங்கி மோசடி.. சென்னையில் 5+ இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை!
சென்னை: சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 19) காலையிலேயே சோதனையை தொடங்கியுள்ளனர். பழைய கார் வாங்கி விற்கும் ஃபைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அயனாவரம், திருமங்கலம் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று பெருமளவில் நிதி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அயனாவரத்தில் குல்னாஸ் பேகம் என்ற பைனான்சியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல திருமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் லட்சுமணசாமி என்பவர் வீட்டிலும் அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications