எடப்பாடி உருவாக்கிய வார் ரூம்.. கதி கலங்கும் SP வேலுமணி டீம்.. அதிமுக மோதலில் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணிக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு வேலுமணி முயற்சி செய்து வருகிறார். வேலுமணி அணிக்கு எதிராக எடப்பாடி பிரத்யேக வார் ரூம் அமைத்து எதிர் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளாராம்.
தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் திரண்டுள்ளனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக எடப்பாடி முயற்சி செய்ததாக வேலுமணி அணி குற்றம் சாட்டியது.

அதிமுக மோதல்
இதனால் வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். எடப்பாடி ஆதரவாளர்கள் இபிஎஸ்ஸை அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும், சண்முகம் அணியில் வேலுமணி அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணி எதிராகவும், வேலுமணி அணி ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இந்த மோதல் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரியுள்ளனர். இதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர்தான் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
எடப்பாடியின் வார் ரூம்
வேலுமணி உள்பட தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களின் பதவிகளை பறிப்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தும் வேலையில் எடப்பாடி இறங்கியுள்ளார். சமூகவலைதளங்களிலும் வேலுமணி டீமுக்கு எதிராக தீவிரமாக களமாட அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ராஜ்சத்யன் கண்காணிப்பில் பிரத்யேக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
வேலுமணி மற்றும் சண்முகம் அணியினருக்கு எதிரான கருத்துகளையும், எடப்பாடி பற்றிய பாசிடிவான கருத்துகளை பரப்புவதும் வார் ரூமின் முக்கியமான பணி. எடப்பாடி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிற தோற்றத்தை உருவாக்கி, வேலுமணி ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் இழுப்பது இதன் முக்கிய நோக்கம் என்கிற அதிமுக வட்டாரம்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications