எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா! அரசு பஸ்களில் அலறும் பயணிகள்! டிரைவர்களுக்கு வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் பணியின்போது அவ்வப்போது செல்போன்களை பயன்படுத்துவதாக பயணிகளிடமிருந்து புகார் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் வழியாக நாள்தோறும் சுமார் 1.76 கோடி மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துகளை பெரிதும் நம்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் இயக்கும் போதே செல்போனில் பேசுவது, அழைப்புகளை ஏற்ப்பது, சில நேரங்களில் வீடியோ பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
குறிப்பாக பயணிகள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் திடீர் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆய்வின்போது ஓட்டுநர்கள் பணியின்போது கைபேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து
ஏற்கனவே வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று போக்குவரத்து துறை பலமுறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மது அருந்தி பணிக்கு வரக்கூடாது, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சத்தமாக பாடல்களை ஒலிபரப்பக் கூடாது போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர்கள்
மேலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் மனிதாபிமான அணுகுமுறையுடன் உதவ வேண்டும் என்றும், அவர்களுக்கான இருக்கை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன் தடை
ஆனால் இத்தனை எச்சரிக்கைகளுக்குப் பிறகும் சில ஓட்டுநர்கள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதாக புகார்கள் வருவதால், தற்போது போக்குவரத்து கழகம் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
பயணிகள் புகார்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகிப்படுத்த கூடாது என மேற்காணும் பார்வையில் கண்ட சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் கைபேசி வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி வருவதாகவும் பயணிகளிடமிருந்து தொடர் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
இவ்வாறு ஒட்டுனர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது உயிர் இழப்பு மற்றும் பெரிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.எனவே ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுனர்கள் கைபேசி வைத்திருப்பது இ பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஓட்டுனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றறிக்கை வாயிலாக மீண்டும் நினைவூட்டப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications