சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று.. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. செம்ம மாற்றம்..முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,674-ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது.

Recommended Video

    New Rules On Quarantine And Testing In Tamilnadu

    தமிழகத்தில் சுமார் 10 நாட்களுக்கு பின்னர் 500க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை இலக்கத்திலேயே பல மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையிலும் பாதிப்பு சரசரவென குறைந்துள்ளது. சென்னையில் புதன்கிழமை 380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (இன்று) அதைவிட குறைவாக 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 5637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலார்ட்! கேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலார்ட்!

    24 பேருக்கு தொற்று

    24 பேருக்கு தொற்று

    தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் கொரோனா பாதித்த நிலையில் இன்றும் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. எனினும் இதில் நேரடியாக மாவட்டத்தில் ஏற்பட்டது குறைவுதான். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்துதலில் உள்ள 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்

    மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்

    இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் கரூரில் ஒருவர், மதுரையில் 7 பேர், தூத்துக்குடியில் இருவர், திருநெல்வேலியில் 13 பேர் அடக்கம். 24 நோயாளிகளில் 22 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்து தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் ஆவர். 2 பேர் கத்தாரில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

    சரசரவென குறைவு

    சரசரவென குறைவு

    மே 14ம் தேதி நிலவரப்படி மாவட்டத்திற்குள் பாதிப்பு என்று பார்த்தால் பல மாவட்டத்தில் பாதிப்பு கிடுகிடுவென சரிந்துள்ளது. செங்கல்பட்டில் 9 பேருக்கும், சென்னையில் 363 பேருக்கும், திண்டுக்கல்லில் ஒருவருக்கும், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும், கன்னியாகுமரியில் 5 பேருக்கும் , கரூரில் ஒருவருக்கும், மதுரையில் 2 பேருக்கும், பெரம்பலூரில் 4 பேருக்கும், ராமநாதபுரத்தில் ஒருவருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தேனியில் ஒருவருக்கும், திருவள்ளூரில் 15 பேருக்கும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும், திருநெல்வேலியில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டங்களில் மட்டும் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில்இருந்து வந்த 24 பேரை சேர்த்தால் மொத்தம் 447 ஆகும்.

    எவ்வளவு பரிசோதனை

    எவ்வளவு பரிசோதனை

    தமிழகத்தில் மே 14ம் தேதியான இன்றைக்கு மட்டும் 11773 பேருக்கு 11965 பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 253 பேர் ஆண்கள் ஆவர். 194 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக இதுவரை 280023 பேருக்கு 291432 சாம்பிள்கள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 9674 பேருககு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 6389 பேர், பெண்கள் 3282 பேர், திருநங்கைகள் 3 பேர் ஆவர். மே 14ம் தேதி நிலவரப்படி (இன்று) 7365 பேர் கொரோனா தொற்றுடன் தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தமிழகத்தில் 9,674 பேருக்கு கொரோனா தொற்று மே 13ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

    • அரியலூர் 348
    • செங்கல்பட்டு 430
    • சென்னை 5637
    • கோவை 146
    • கடலூர் 413
    • தர்மபுரி 5
    • திண்டுக்கல் 112
    • ஈரோடு 70
    • கள்ளக்குறிச்சி 61
    • காஞ்சிபுரம் 164
    • கன்னியாகுமரி 31
    • கரூர் 56
    • கிருஷ்ணகிரி 20
    • மதுரை 132
    • நாகப்பட்டினம் 47
    • நாமக்கல் 77
    • நீலகிரி 14
    • பெரம்பலூர் 137
    • புதுக்கோட்டை 6
    • ராமநாதபுரம் 31
    • ராணிப்பேட்டை 76
    • சேலம் 35
    • சிவகங்கை 13
    • தென்காசி 54
    • தஞ்சாவூர் 70
    • தேனி 72
    • திருப்பத்தூர் 28
    • திருவள்ளூர் 495
    • திருவண்ணாமலை 136
    • திருவாரூர் 32
    • தூத்துக்குடி 38
    • திருநெல்வேலி 114
    • திருப்பூர் 114
    • திருச்சி 67
    • வேலூர் 34
    • விழுப்புரம் 306
    • விருதுநகர் 44

    English summary
    district wise abstract of covid 19 positive cases in tamil nadu, report of may 14 , chennai top of the list
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X