5 லட்சம்.. தமிழகத்தில் புதிய மைல்கல்லை எட்டியது கொரோனா.. சேலம், சென்னையில் கிடுகிடு பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 5,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெதுவாக குறைந்து வருகிறது. சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 47 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நன்றாக குறைந்துவிட்டது. சென்னை, சேலம், திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, உள்ளிட்ட சிலமாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,47,366 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 554 பேரும், கடலூரில் 418 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும், சேலம் மற்றும் வேலூரில் 223 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் 10 பேர் பலி

சேலத்தில் 10 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 74 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கோவை, மதுரை மற்றும் கடலூரில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை மிக அதிகம்

பரிசோதனை மிக அதிகம்

தமிழகத்தில் இன்று 84,308 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 58,88,086 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 82,387 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 57,01,399 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 47,012 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 148584 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 10393 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 490 பேரும், சேலத்தில் 309 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், செங்கல்பட்டில் 299 பேரும், கடலூரில் 251 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+