கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 97.06% ஆக அதிகரிப்பு - நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் இந்தியாவில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 57,477 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பினால் ஒரே நாளில் 738 பேர் மரணமடைந்து
டெல்லி: நாட்டில் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10வது நாளாக 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 நாட்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.06% ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் இந்தியாவில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,05,02,362 பேராக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.35% ஆக உள்ளது தொடர்ந்து 26 நாட்களுக்கு 5% க்கும் கீழாக குறைவாக பதிவாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,05,779 பேராக உயர்ந்துள்ளது. தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 51 வது நாளாக அதிகரித்துள்ளது. மீண்டவர்கள் விகிதம் 97.06% ஆக அதிகரிக்கிறது.
கொரோனா பாதித்தவர்களின் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 738 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,01,050 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் நாடு முழுவதும் 4,95,533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை நாடு முழுவதும் 34,46,11,291 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 41.64 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications