மதுரையில் மிகவும் குறைந்த கொரோனா.. கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த மாயாஜாலம்!
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்.
பாசிட்டிவிட்டி ரேட் என்றால் என்ன என பார்த்தோமேயானால் 100 பேருக்கு கொரோனா சோதனை எடுத்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வருகிறது என்பதுதான் டிபிஆர் எனப்படும் Total Positivity Rate.
பொதுவாக 100 பேரில் 6 அல்லது 5 பேருக்கு கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என அர்த்தம்.

தனியார் புள்ளி விவரம்
அந்த வகையில் கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளரான விஜய் ஆனந்த் தினமும் கொரோனா அப்டேட்டுகளை ட்விட்டரில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பாதிப்பு சதவீதம் 5 ஐ விட குறைவாகவே இருக்கிறது.

கொரோனா
சேலத்தில் மட்டும் 5.24 சதவீதம் இருக்கிறது. அதாவது 100 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்தால் அதில் 5 அல்லது 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக அரியலூர் உள்ளது. இங்கு டிபிஆர் ரேட் 4.98 ஆக உள்ளது.

திருப்பூர்
பின்னர் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம். இந்த மாவட்டங்களில் டிபிஆர் ரேட்டானது தலா 4.77 சதவீதமாக உள்ளது. நோய்த் தொற்று அதிகம் இருந்த கோவையில் 4.52 ஆக டிபிஆர் ரேட் உள்ளது. அது போல் நீலகிரியில் 4.38, ஈரோட்டில் 4.24, திருப்பூரில் 3.13 ஆக டிபிஆர் ரேட் விகிதம் உள்ளது.

முன்னேற்றம்
தலைநகர் சென்னையை எடுத்துக் கொண்டால் இங்கு 0.94 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தால் ஒருவருக்கு பாசிட்டிவ் என வருகிறது. கொரோனா ஹப்பாக இருந்த சென்னைக்கு இது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

எப்படி
அது போல் மதுரை மாவட்டம். இங்கு 0.52 சதவீதமாக டிபிஆர் ரேட் உள்ளது. அதாவது 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் எல்லாருக்கும் நெகட்டிவ் என வருகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா மிக மிக கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்கள் என பார்த்தால் மதுரை, சென்னை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்டவை ஆகும்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications