தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,29,573ஆக அதிகரித்துள்ளது. 805 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் 8,11,023 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6, 299 பேராக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 9,36,57,598 பேரை பாதித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. 20,05,558 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 6,69,59,087 பேர் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Covid update Tamil Nadu: 621 people were diagnosed with corona infection today - 805 returned

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,05,28,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,01,62,738 பேர் குணமடைந்துள்ளனர். தினசரியும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றி சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 621 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 29ஆயிரத்து 573ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 389பேர் ஆண்கள், 232பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 805 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,11,023 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6, 299 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 67 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழாக குறைந்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12,251 ஆக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+