கொரோனா தடுப்பூசி ஒத்திகை Dry run என்றால் என்ன? - அது எப்படி நடைபெற்றது
கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதை எவ்வாறு மக்களுக்கு போடவேண்டும்? என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
சென்னை: நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வைப்பதே இதன் முக்கிய அம்சமாகும். தடுப்பூசி விநியோகத்தை ஆன்லைன் வாயிலாக கண்காணித்தல், பரிசோதனை ரசீது மற்றும் ஒதுக்கீடு, பணியாளர்களை தயார்படுத்துதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு அறிவுரைகளை வழங்குதல் போன்றவை இந்த ஒத்திகையில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video

நாட்டில் பேரிடர்கள் நிகழும் போது அதை தடுப்பது எப்படி என்று அவ்வப்போது ஒத்திகை நடைபெறும். தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி, நிலநடுக்கம், சுனாமி, தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஒத்திகை நடத்தப்படும். அதுபோல கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்து இன்று நாடு முழுவதும் ஒத்திகை நடைபெற்றுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் பாரத் பயோடெக், சீரம் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில வாரங்களில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும்.

கோ வின்
தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போட்ட பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும். க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும். எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறி விட்டார்கள் போன்ற அறிக்கைகளும் செயலியில் உருவாக்கப்படும். தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன கிடங்குகளின் வெப்பநிலையையும் நிகழ்நேரத்தில் செயலி அனுப்பும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒத்திகையில் என்னென்ன அம்சங்கள்
இன்றைய தினம் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையில், கோவிட் -19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதை எவ்வாறு மக்களுக்கு போடவேண்டும்? என்றும் இதன் மூலம் தடுப்பூசி வழங்கலின் போது என்னென்ன தடைகள் ஏற்படுகிறது, அவை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒத்திகை நடைபெற்றது.

உண்மையான தடுப்பூசி இல்லை
கொரோனா தடுப்பூசியின் இந்த ஒத்திகையில் உண்மையான தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை. தடுப்பூசி தவிர பிற செயல்முறை அனைத்தும் உண்மையான அடிப்படையில் சோதிக்கப்பட்டது. இந்த ஒத்திகையின்போது, கோ-வின் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இந்த செயலியில் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும் வழிமுறைகள் ஆராயப்பட்டன.

தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ்
தடுப்பூசி போட்ட பிறகு, கோ வின் செயலி மூலம் சான்றிதழும் கிடைக்கும். இது தவிர இந்த ஒத்திகையில் தடுப்பூசி எங்கு போடப்படும், அந்த மையங்கள் எவ்வாறு அடையாளம் காணப்படும் என்பதும் ஆராயப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம், தடுப்பூசி வழங்கலின் முழு செயல்முறையும் பரிசோதிக்கப்பட்டு ஆராயப்படும்.

தடுப்பூசி ஒத்திகையில் என்னென்ன
இந்த ஒத்திகையில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை ஆன்லைன் வாயிலாக கண்காணித்தல், பரிசோதனை ரசீது மற்றும் ஒதுக்கீடு, பணியாளர்களை தயார்படுத்துதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு அறிவுரைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். மேலும் தடுப்பூசி குளிர்விப்பு கலன்களை பரிசோதித்தல், போக்குவரத்து வசதிகள், கூட்டத்தை மேலாண் செய்தல், போதிய சரீர இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவையும் இடம்பெற்றன.

நாடு முழுவதும் நடைபெற்ற ஒத்திகை
ஒத்திகை நிகழ்வானது நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் 25 தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தி பார்க்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனை, நகர்ப்புற மையங்கள், தனியார் சுகாதாரத்துறை மையங்கள், கிராமப்புற பகுதிகள் போன்றவைகளிலும் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் போது அதை செயல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.

விரிவான பயிற்சி
தடுப்பூசி போடும் பணிகளுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பூசி போடுபவர்கள், மாற்று பணியாளர்கள், கோல்ட் செயின் ஹேண்ட்லர்ஸ், மேற்பார்வையாளர்கள், தகவல் மேலாளர்கள், ASHA ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பயிற்சியில் 2,360 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று வரை மாநில அளவிலான பயிற்சிகள் நடைபெறுகின்றன. 681 மாவட்டங்களில் உள்ள 49,604 பயிற்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தயார்
தற்போதைய கோல்ட் செயின் சிஸ்டத்தின் மூலம் தடுப்பூசிகளை சேகரித்து வைப்பதற்கு 85,634 உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 28,947 கோல்ட் செயின் பாயிண்ட்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications