கோவிஷீல்ட், கோவாக்சின் மருந்து ஒரு டோஸ் ரூ.255 மட்டுமே - அதிரடி விலைக்குறைப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் விலையை குறைப்பதாக தடுப்பூசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைப்பதாக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்புசி உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 600 ரூபாயில் இருந்து 225 ரூபாயாக குறைப்பதாக இந்திய சீரம் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

விலை குறைப்பை உறுதிப்படுத்தும் போது, SII தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசுடன் கலந்துரையாடிய பிறகு, தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை ரூ.600 லிருந்து மாற்றியமைக்க SII முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஒரு டோஸுக்கு ரூ. 225. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தை வழங்குவதற்கான மையத்தின் இந்த முடிவை நாங்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளர்.
இதே போல பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ஊடகங்களிடம் கூறும்போது, "தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் மருந்தின் விலையை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக கொடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. பின்னர் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும், தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
இரண்டு டோஸ் செலுத்திக்கொண்ட வயதானவர்கள் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையாக இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை முதல் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எந்த வயதினராக இருந்தாலும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அவர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் ஆகியிருக்க வேண்டும். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் கோவிஷீல்ட், கோவாக்சின் விலையை ஒரு டோஸ் 225 ரூபாயாக குறைத்துள்ளன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.












Click it and Unblock the Notifications