செம்ம.. குறைகிறது தொற்று.. நீங்குகிறது கட்டுப்பாடுகள்.. வருகிறது தளர்வுகள்.. மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது
சென்னை: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய தகவல் ஒன்று மத்திய அரசு சார்பில் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் தொடங்கி 2 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் கூட உலகில் எந்தவொரு நாடும் வைரஸ் பாதிப்பை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை..
அதற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸ் கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதை முற்றிலுமாக அழிப்பது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.

அறிகுறிகள்
அதேசமயம், தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டு நாடுகளில் பாதிப்பு குறைவாக உள்ளது ஆறுதலை தந்து வருகிறது.. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன... இந்தியாவில் தொடர்ந்து புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவானாலும். தொற்று எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.. அதேபோல, தொற்று வீதமும் குறைந்த அளவிலேயே உள்ளது.

புது அறிவிப்பு
இதையடுத்து சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது.. 4 நாட்களுக்கு முன்புகூட, இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.. அத்துடன் ஒமிக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை நீக்கம் செய்த சுகாதாரத்துறை, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது.

சுகாதாரத்துறை
இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது: "கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம்..

பாதிப்புகள்
புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி 21ம் தேதி முதல் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த வாரம், சராசரி தினசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 27,409 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி பாதிப்பு விகிதம் 3.63 சதவீதமாக உள்ளது.

நடைமுறைகள்
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications