Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி தூக்கிப்போடுது பாருங்க.. தெருவில் சென்ற சிறுமியை முட்டி பந்தாடிய பசு மாடு.. சென்னை ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி முடிந்து தெருவில் அம்மா உடன் அமைதியாக நடந்து சென்ற சிறுமியை பசுமாடு ஒன்று முட்டி கீழே தள்ளி விடாமல் தனது கொம்புகளால் குத்தி தள்ளிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் அடுத்த எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் சிறுமி, அவரது சகோதரருடன் நடந்து சென்றபோது பின்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பசு மாட்டினை பயம் காட்டுவது போல் குரல் கொடுத்துள்ளான். இதனால் மிரண்டுபோன பசு தனது அருகில் இருந்த சிறுமியை தனது கொம்பால் முட்டி தூக்கி கீழே தள்ளியது. காலால் வைத்து நசுக்கி தாக்கியது.

Cow hits a girl brutally at Arumbakkam Corporation Commissioner explains Chennai

அதைப் பார்த்த சிறுமியின் தாயார் கத்தி கூச்சலிட்டார். அந்த சிறுமியும் அலறினார். ஆனால் அந்த பசு விடாமல் அந்தச் சிறுமியை முட்டி தாக்கியது. அந்த மாட்டுடன் இருக்கும் சற்றே வளர்ந்த கன்று ஒன்றும் சேர்ந்து தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்துஆளுக்கொரு கல்லாக எடுத்து வீசியும் அந்த மாடு அசராமல் சிறுமியை தாக்குகிறது.

ஒரு நொடிப் பொழுது மாட்டின் கவனம் சிதறவே இளைஞர் ஒருவர் சிறுமியை சற்று தூரம் இழுத்து வருகிறார். ஆனால் மீண்டும் மாடு சிறுமியை இழுத்து தாக்குகிறது. ஒரு நிமிடம் வரை இந்தப் போராட்டம் நீடிக்கிறது. அப்போது ஒரு தடியுடன் பின்னால் இருந்து ஓடிவரும் நபர் மாட்டை அடித்துத் துரத்துகிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்கின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் காண்போரை பதற வைக்கிறது. பசுமாடு இப்படி வெறியோடு தாக்குமா? என்று அஞ்ச வைக்கிறது.

இந்த தாக்குதலில் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் ஐஏஎஸ், பசு மாட்டினை அஜாக்கிரதையாக சாலையில் உலாவ விட்ட அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நேற்று மாலை சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார். அந்தச் சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வாழ்விடப் பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதியில்லை. ஆனால் அது எங்களின் வாழ்வாதாரம் என்று கூறி சிலர் மாடு வளர்க்கின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு மாடு வளர்க்க 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். இதுதான் இப்போதைக்கு அமலில் இருக்கும் சட்டமாக உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி மாடுகளை நாங்கள் கைப்பற்றி வந்தாலும் ஓரிரு நாட்களில் ரூ.2000 அபராதம் செலுத்திவிட்டு மாட்டை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை. சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இந்த சம்பவத்தைப் பொருத்தவரை சிறுமியை முட்டித்தள்ளிய மாட்டை பிடித்து வைத்திருக்கிறோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்தச் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி ஆணையர் என்பதைத் தாண்டி ஒரு கால்நடை மருத்துவராகச் சொல்கிறேன், மாடுகளை வளர்ப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாடுகளுக்கு நோய் இருக்கிறதா என்பதை முறையாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் இத்தனை ஆக்ரோஷமாக தாக்கிய மாட்டுக்கு வெறிநோய் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

வாழ்வாதாரத்துக்காக மாடுகளை வளர்க்கும்போது அதன் பாலைக் கறந்து சொசைட்டியில் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கு நோய் இருந்தால் அது பால் மூலம் பரவாமல் இருக்கத்தான் அது பால் பண்ணைகளில் ஃபாஸ்சரைஸிங் எனப்படும் சுத்திகரிப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே பொறுப்புடன் இருங்கள் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+