தேதி குறிச்சாச்சி.. பாஜகவில் விடைபெற்ற சிபி ராதாகிருஷ்ணன்..ஜார்கண்ட் ஆளுநராக பிப் 18ல் பொறுப்பேற்பு
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவராக உள்ள சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பிப்ரவரி 18 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
சென்னை: ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 18 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்த நிலையில் இந்த தகவலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் முன்னாள் பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் இல கணேசனும் ஆளுநராக உள்ளார். மணிப்பூர் ஆளுநராக செயல்பட்டு வந்த இவர் தற்போது நாகலாந்து ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிபி ராதாகிருஷ்ணன் நியமனம்
இந்நிலையில் தான் தமிழிசை, இல கணேசன் வரிசையில் பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக 3 நாட்களுக்கு முன்பு நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அறிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் உள்ள நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் அம்மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்பட பாஜக தலைவர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் உள்பட பிற கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் இருந்து ராஜினாமா
ஒருவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதால் அவர் எந்த கட்சி பொறுப்புகளிலும் இருக்க கூடாது. இதனால் சிபி ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து இன்று சிபி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பிப்ரவரி 18 ல் பொறுப்பேற்பு
இதையடுத்து அண்ணாமலை உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு சிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‛‛நான் பிப்ரவரி 18 ம் தேதி ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளேன்'' என்றார். இதன்மூலம் ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 18 ம் தேதி பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது.

உணர்ச்சிமயமான நேரம்
மேலும் சிபி ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‛‛என்னுடைய வாழ்வில் மிகவும் உணர்ச்சிமயமான நேரமாக இதனை பார்க்கிறேன். பதினேழரை வயதில் ஜனசங்கத்தின் உறுப்பினராக பொதுவாழ்க்கையை தொடங்கினேன். 1974ல் தொடங்கிய பொதுவாழ்க்கை பாஜக இயக்கத்தோடு பிண்ணி பிணைந்து இன்று வரை தொடர்ந்தது. பாஜகவில் இருந்து அடுத்தக்கட்டம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இந்த விலகலை தவிர்க்க இயலாத ஒன்றாக பார்க்கிறேன்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்
எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்னாக இருந்தாலும் கூட ஒரு நாள் ஓய்வு பெற வேண்டும். அத்தகைய சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதிகமான பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வாழும் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. அங்கு ஆளுநராக உழைக்கும் வாய்ப்பை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எனக்கு வழங்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இளைய தலைமுறை
இன்றைக்கு அற்புதமான இளைய தலைமுறை பாஜகவில் உள்ளது. கடந்த கால உழைப்புக்கு கிடைத்த மகத்தான பரிசாக இதை கருதுகிறோம். யார் தடுத்தாலும், எத்தகைய அவதூறு பரப்பினாலும் குற்றம் இல்லாதபோது குற்றங்கள் சுமர்த்தினாலும் தமிழ்நாட்டிலும் பாஜகவின் ஆட்சி என்பதை அண்ணாமலை நடத்தி காட்டுவார்'' என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications