பொதிகை பெயர் மாற்றம்.. தமிழ் அடையாளத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி.. கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை: பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் மத்திய பாஜக அரசு அழிக்க முயற்சிக்கிறது என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் 'டிடி பொதிகை' தொலைக்காட்சி சேனலின் பெயர் 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்தார். 24 ஆண்டுகளாக பொதிகை என அழைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை டிடி தமிழ் என மாற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசாங்கத்தால் 1975ல் தொடங்கப்பட்ட சென்னை தொலைக்காட்சி நிலையம், தமிழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி, 2000 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், பல்வேறு மொழிகளில் இருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.
இந்த 'பொதிகை' என்ற பெயர், தமிழர் திருநாளாம் பொங்கல் முதல் மாற்றப்பட்டு 'டிடி தமிழ்' என அழைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அண்மையில் அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவந்த 'பொதிகை' என்பதை 'டிடி தமிழ்' என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பொதிகையின் பெயரை வெறுமனே டிடி தமிழ் என்று அறிவிப்பது எதற்காக?
அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராஷ்டிராவில் சஹயாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று தொலைக்காட்சிகளுக்கு பெயர்கள் வைக்கப்பட்டன.'பொதிகை' பெயர் நீக்கம், இந்தப் பெயர்களையும் மாற்றுவதற்கான தொடக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அந்தந்த மாநில மக்களின் தனித்துவத்தை, உணர்வுகளை அவமதிக்கும் மத்திய அரசின் போக்கு கைவிடப்பட வேண்டும்.

ஏற்கனவே, பொதிகை தொலைக்காட்சியில், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வுக்கு போதிய இடம் வழங்காமல், தமிழ் சார்ந்த தனித்துவமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல், இந்தியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தமிழில் மொழி மாற்றம் செய்து உள்ளீடற்ற ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் மத்திய பாஜக அரசு அழிக்க முயற்சிக்கிறது. இந்த பெயர் மாற்ற முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை கைவிட்டு தொடர்ந்து பொதிகை என்ற பெயரிலேயே அழைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையை கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications