சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி... மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தா.பாண்டியன் அவதிப்படுவதுடன் அதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார்.

தமிழக துரோகி யார்?.. அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார்.. ஓபன் சேலஞ்ச் விடுத்த திமுக எம்பி தமிழக துரோகி யார்?.. அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார்.. ஓபன் சேலஞ்ச் விடுத்த திமுக எம்பி

அனுமதி

அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான தா. பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்நோயாளியாக அவரை அனுமதித்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவதி

அவதி

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் தா.பாண்டியன். இதனால் பல முறை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் இப்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.

ஸ்டாலின் வருகை

ஸ்டாலின் வருகை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றனர். அவர்களை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச்சென்றார் இந்திய கம்யூ.மாநிலச் செயலாளர் முத்தரசன்.

சிரிப்பு

சிரிப்பு

தா.பாண்டியனிடம் பேசிய ஸ்டாலின், உங்களுக்கு ஒன்றும் ஆகாது, தைரியமாக இருங்க எனக் கூறியுள்ளார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பாண்டியனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், உடல்நிலை பற்றியும் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

English summary
cpi leader t.pandian admitted in rajivgandhi govt hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X