வாய் கொழுப்புடன் பேசுகிறார் ஆளுநர்.. தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது.. எச்சரிக்கும் முத்தரசன்!
தமிழ்நாட்டில் ஆளுநர் எங்கும் நடமாட முடியாது என்று முத்தரசன் எச்சரித்துள்ளார்.
சென்னை: காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என்று கூறிய முத்தரசன், ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தெரிவித்தார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை முத்தரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.

முத்தரசன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் கூறுகையில், சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தவறி பெய்தப் பருவ மழையின் காரணமாக மிகக் கடுமையான அளவில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்களை அனுப்பி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கைப் பெற்று அந்த அறிக்கையினை மத்திய அரசிற்கு ஈரப்பதம் 22 சதவிகிதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

காலதாமதம்
ஆனால் மத்திய அரசு காலதாமதமாக 20 சதவிகிதம் வரையே நெல் கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே உள்ளது. இருப்பினும் முயற்சியை மேற்கொண்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

முத்தரசன் எச்சரிக்கை
பின்னர் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆளுநர் பேச்சு குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

சிபிஐ போராட்டம்
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாகொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது. ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும். காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

சரணாகதியடைவதில் கைதேர்ந்தவர்
தொடர்ந்து அதிமுக விவகாரம் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்த வரையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பவர் எடப்பாடி பழனிசாமி அல்ல. மத்தியில் ஆளக்கூடியவர்களே. அதேபோல் சரணாகதி அடைவதில் ரொம்ப கைதேர்ந்த மனிதர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications