கூடுதலாக ‘சீட்’ கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி.. யோசித்த திமுக குழு.. முதல்வர் வந்த பிறகு மீண்டும் பேச்சு!
சென்னை: கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளதாக, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடத்தின. அடுத்தகட்டமாக வரும் பிப்.9-ம் தேதி பேச திட்டமிட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு இன்று பிற்பகலில் சிபிஐ கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, சிபிஐ மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடனும், நாளை மாலை மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அக்கட்சியின் எம்.பி சுப்பராயன், "நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. தொடக்கம் மிக நன்றாக இருந்தது. இணக்கமான அணுகுமுறையை நாங்கள் பார்த்தோம். நல்லதே நடக்கும். நல்ல முடிவு கிடைக்கும்.
எந்த தொகுதிகளை கேட்டிருக்கிறோம் என்பது குறித்து இங்கே பகிர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. கடந்தமுறையை விட கூடுதலாகவே சீட் கேட்டிருக்கிறோம். திமுக குழுவினருக்கு ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் 7ஆம் தேதி சென்னை வந்த பிறகு தேதியை தீர்மானித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications