பேரிடி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
சென்னை: உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. சளி, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் சங்கரய்யா. 102 வயது வரை வாழ்ந்த சங்கரய்யாவின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமல்லாது உழைக்கும் மக்களுக்காகவும் போராடியவர்.

பொது உடமை இயக்கத்தை வலுப்படுத்திய சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அரசியல் காரணங்களால் அது கொடுக்க முடியாமலேயே போனது.
சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போடாத ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி. இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications