விஜய் அழைத்தால் கூட்டணி? யாருங்க சொன்னா? இல்லவே இல்லை என மறுத்த மா., கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவினர் ஹேப்பியாகினர். இந்நிலையில் தான் அப்படி நான் சொல்லவே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. ஆனால் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

விஜய் ஆட்சியமைத்து முதல்வராக வேண்டும் என்றால் இன்னும் 11 எம்எல்ஏ (விஜய் 2 தொகுதியில் ஜெயித்துள்ளார். ஒன்றை ராஜினாமா செய்யும் காலியிடத்தையும் சேர்த்து) ஆதரவு தேவையாக உள்ளது. இதனால் பிற கட்சிகளை தொடர்பு கொண்டு விஜய் ஆதரவு கோரி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சியில் இன்று செய்தி வெளியானது. அதில், ''கூட்டணி ஆட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்'' என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவின.
பரவும் இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனியார் தொலைக்காட்சியில் வெளியான ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து கூறியுள்ளதாவது:
இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
— Shanmugam P (@Shanmugamcpim) May 5, 2026
அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை.
எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. pic.twitter.com/1WZkiqz3T3
''இன்று தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்குவது பற்றி ஆலோசிப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இதன்மூலம் தற்போதைய சூழலில் தவெகவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒவ்வொரு நகர்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3ல் தோல்வியை தழுவியது. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கீழ்வேளூர் (தனி) தொகுதியில் லதா என்பவர் 56,108 வாக்குகள் வாங்கி தவெக வேட்பாளர்கள் செந்தில் பாண்டியனை 2,278 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார். செந்தில் பாண்டியன் மொத்தம் 53,830 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி 68,938 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். இங்கு தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 53,369 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார். ஒருவேளை இவர்கள் 2 பேரும் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மெஜாரிட்டிக்கான 118 மேஜிக் நம்பரை எட்டுவதில் ஒருபடி விஜய்யின் தவெக முன்னோக்கி செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications