Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களை பிளவுபடுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. அதாவது மோடி கீபோர்ட்டிலுள்ள ஏ மற்றும் டி இடையேயான எழுத்தை பார்க்க வேண்டும் (S=Silence) என்பது மார்க்சிஸ்ட் கோரிக்கை.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

CPIM stages protests in Chennai against PM Narendra Modi s speech will PM see key between A and D

இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். அதாவது, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கன்டனத்தை பதிவு செய்தது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடி பேச்சை கண்டித்துள்ளன. மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். அவர், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஊடுருவியவர்கள் என்ற வார்த்தையை இஸ்லாமியர்கள் மீது பயன்படுத்தியுள்ளார். இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மக்களை பிளவுபடுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்வதோடு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ், "10 ஆண்டுகள் ஆட்சி செய்தும், தனது சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வழியற்ற பிரதமர் மோடி, 4 நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தானில் பேசும்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள், தங்கம், சொத்து எல்லாவற்றையும் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள், தாய்மார்களின் தாலியை கூட அறுத்து கொடுத்துவிடுவார்கள் எனப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி மதவெறியை தூண்டும் வகையில் பேசுவது இது ஒன்றும் புதிதல்ல. மத ரீதியாகப் பேசுவதில் தொடர் குற்றவாளி மோடி. இப்படி பேசுவதன் மூலம் அரசியல் ரீதியாக அறுவடையும் செய்திருக்கிறார். அதன் காரணமாகத் தான் தொடர்ச்சியாக இதனைச் செய்கிறார். இந்த நாட்டின் ஒற்றுமையை பற்றி மோடிக்கு கவலை இல்லை. மோத விட்டு ரத்தம் குடிக்கும் நோக்கம் தான் மோடிக்கு உள்ளது.

பிரதமர் மோடியை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது. இந்திய தண்டனை சட்டத்தின் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும் அவர் தண்டிக்கத்தக்கவர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளதோடு, டெல்லியில் காவல் நிலையத்திலும் மோடி மீது புகார் அளித்துள்ளோம்.

இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி ஆளக்கூடாது என்பது மட்டுமல்ல, பேசவே கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும், பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுத்து, அவர் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+