சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டியலின மக்களின் வீடுகளை நொறுக்கி அட்டூழியம்.. “அமைதியை நிலைநாட்டுங்க”: அரசுக்கு சிபிஐஎம் அலெர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சங்கராபுரம் மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டியலித்தவர் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டியலின மக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவது எப்படி? தமிழ்நாடு அரசிடம் பாடம் கற்க வந்த 3 ஆந்திர அமைச்சர்கள்அரசு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவது எப்படி? தமிழ்நாடு அரசிடம் பாடம் கற்க வந்த 3 ஆந்திர அமைச்சர்கள்

பட்டியலின மக்களின் வீடுகள் மீது தாக்குதல்

பட்டியலின மக்களின் வீடுகள் மீது தாக்குதல்

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வீடுகளுக்கு சென்ற 18ஆம் தேதியன்று சாதிய ஆதிக்க சக்தியை சேர்ந்தவர்கள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கைகளில் தடி, கம்புகளுடன் அந்த பகுதிக்குள் புகுந்து குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர்

இத்தகைய மோசமான தாக்குதலால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இத்தாக்குதலில் முக்கிய அரசியல் பிரமுகரான சீனிவாசன் என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பட்டியலின மக்களை தாக்கி சாதிய மோதலையும், பதற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியின் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படையான விசாரணை

வெளிப்படையான விசாரணை

இந்தத் தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிலரின் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்திருப்பது மோசமான விளைவுகளையே உருவாக்கும் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறோம். எனவே, மூங்கில்துறைபட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தனது முழுமையான வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இழப்பீடு

இழப்பீடு

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உறுதி செய்ய வேண்டுமெனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு சேதத்திற்கு ஈடான உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க முன்வர வேண்டுமெனவும் தான் வலியுறுத்துவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
CPIM state secretary K. Balakrishnan has insisted that appropriate action should be taken against the criminals who attacked with caste hatred near Sankarapuram in Kallakurichi district and compensation should be given to the affected people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X