அதிமுக மோடியின் வாரிசு.. "ஒரே நாடு ஒரே தேர்தல்" எப்படி சாத்தியமாகும்.. கொந்தளித்த பாலகிருஷ்ணன்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: மோடியின் வாரிசாக மாறிவிட்டதால் அதிமுக ஒரே நாடு முழக்கத்தை முன்வைக்கிறது" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.. இந்த முறை அதிமுக தனித்து போட்டியிடுகிறது.. அந்த வகையில், அக்கட்சி தலைவர்கள் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக எடப்பாடியின் பேச்சு பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. 2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி தெரிவித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
நேற்றுகூட, கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்... அப்போது பேசிய அவர் பேசியபோது, ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி அதிமுக... கட்சி இருக்கிற வரை அதிமுகவினர் இதில் இருப்பார்கள்.. ஆனால், திமுக கட்சி தேய்பிறை மாதிரி தேய்ந்துகொண்டே செல்கிறது. திமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்.

செந்தில் பாலாஜி
இந்த மாவட்டத்தின் அமைச்சர் ஏற்கெனவே பல கட்சிக்கு போனவர். இப்போது திமுகவில் இருக்கிறார். அடுத்த தேர்தலில் செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு போவார் என்பதே தெரியாது... திமுக அரசு தேர்தலை தடுத்துநிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தது. நேரடி அரசியல்தான் தேவையே தவிர, மிரட்டல் அரசியல் அல்ல. 2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது" என்றார்.

சிபிஎம்
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றன.. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக அர்த்தம் என்பதையே எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பேச்சில் வெளிப்படையாக சுட்டிக் காட்டுவதால், எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வலிய பதிவு செய்து கொண்டிருக்கின்றன.. இந்த பேச்சினை 4, 5 மாதங்களுக்கு முன்பிருந்தே எடப்பாடி துவங்கிவிட்டார். அப்போதே கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு முறையும் பேட்டி தரும்போதும் ஒரே நாடு ஒதே தேர்தல் என்ற எடப்பாடியின் பேச்சிற்கு எதிர்ப்பு காட்டி உள்ளார்.

ஒரே கலாச்சாரம்
ஒருமுறை பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற வகையில் ஒரே கல்விமுறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அராஜகமான, அடாவடித்தனமான ஆட்சியை பாஜக நடத்துகிறது" என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.. நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கும் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. "ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை.. சில மாநிலங்களில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.. அது எப்படி மக்களாட்சியாகும்.. மோடியின் வாரிசாக மாறிவிட்டதால் அதிமுக ஒரே நாடு முழக்கத்தை முன்வைக்கிறது" என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications