நினைத்தது நடக்கிறது.. மு.க.அழகிரியை சந்திக்கவுள்ளார் சு. வெங்கடேசன்
Recommended Video

சென்னை: நினைத்தது போலவே மு.க.அழகிரியை சந்திக்கவுள்ளார் மதுரை லோக்சபா தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன்.
தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்பது அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நடைமுறை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நடைமுறை அரசியல் கட்சிகளில் காலம்காலமாக உள்ள எழுதப்படாத விதி என்றே சொல்லலாம். சரி விஷயத்திற்கு வருவோம், மதுரை மக்களவைத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திமுக ஒதுக்கியதால் சற்றே ஆறுதல் அடைந்துள்ளார்களாம் மு.க.அழகிரியும் அவரது ஆதரவாளர்களும்.

டென்ஷன இல்லை
ஒருவேளை மதுரையில் திமுக போட்டியிட்டு வேட்பாளரை நிறுத்தியிருந்தால், அழகிரி உஷ்ணம் ஆகியிருப்பாராம். நேரடியாக தன்னை சீண்டாததால் அவரும் அதிரடி காட்டவில்லையாம்.

பயம்
தமிழகத்தின் முக்கிய தொகுதியான மதுரையை கூட்டணி கட்சிக்கு ஸ்டாலின் ஒதுக்கியதற்கு காரணம் இல்லாமல் இல்லையாம். உள்ளடி வேலைகளால் திமுக வேட்பாளருக்கு சிக்கல் ஏற்படும் என்பதை அறிந்தே மதுரையை சி.பி.எம்.க்கு தந்தாராம்.

திமுகவுக்கும் ஹேப்பிதான்
இதனிடையே சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளதால் திமுக முகாமுக்கு மகிழ்ச்சியாம். வெங்கடேசனுக்கு இலக்கியவாதி, எழுத்தாளர் என்ற சிறப்பு உள்ளதால் வாசகர் வட்டத்தில் இருந்து ஆதரவு கரம் நீள்கிறதாம்.

வாசகர்கள் பட்டாளம்
அவருக்கு பணியாற்ற வாசகர் வட்டாரத்தினர் மதுரைக்கு படை எடுக்க உள்ளார்களாம். இதனால் அழகிரி தரப்பை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை என்பது ஸ்டாலின் கணக்கு.

அழகிரியுடன் சந்திப்பு
இருப்பினும் அனைவரிடமும் எளிதாக பழகக்கூடிய வெங்கடேசன், மதுரை மண்ணின் முக்கியஸ்தர் என்ற அடிப்படையில் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்பட்டது தற்போது அழகிரியை சந்திப்பேன் என்று வெங்கடேசனே கூறி விட்டார். இதுகுறித்து ஸ்டாலின் என்ன நினைப்பார் என்று தெரியவில்லை.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications