10% இடஒதுக்கீடு! தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம்.. ஆனால்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொன்ன யோசனை
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் ஆணையம் அமைத்து அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து விவாதிக்க திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. சிபிஎம் சார்பில் பங்கேற்றிருந்த நாகை மாலி மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

நாகை மாலி
மேலும் அவர் கூறியதாவது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 1990ம் என்ப ஆண்டிலிருந்தே முன்வைத்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய அரசு இயற்றியிருக்கும் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பான ரூ.8 லட்சம் என்பதை கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதே கட்சி எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

ஆணையம்
அதேபோல நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளிடம் கருத்து கேட்டு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேசிய அளவில் இந்த சட்டத்திற்கு வரவேற்பளித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95% மக்கள் இட ஒதுக்கீடு வரம்புக்குள் வந்து விட்டார்கள். இன்னும் இருக்கும் ஐந்து சதவீதம் மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரவேண்டும். ஆயினும் தமிழ்நாட்டில் இந்த 10% இட ஒதுக்கீடு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். எனவே இதனை மாநிலத்தில் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையம் அமைத்து அந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், ஆணையம் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வருமான வரம்பு
இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இதைதான் தற்போது நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைத்துள்ளோம். திமுக இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த கருத்துடன் ஒன்றிப்போகிற கருத்தைக் கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் சீராய்வு மனுவில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. ஆனால் சிபிஎம் கட்சியின் நிலைப்பாடு 'ஆணையம்' அமைத்து சட்டத்தை அமல்படுத்துவது என்பதுதான். மேலும், உயர் சாதியினருக்கான வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக குறைக்க வேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.

ஆதரவு
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை பாஜக அறிமுகம் செய்தபோது, அப்போது மக்களை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்கராஜன் இந்த மசோதாவை கடுமையாக சாடினார். வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது பாஜக தனது வாக்கு வங்கி அரசியலுக்காக கொண்டு வந்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார். பின்னர் இந்த மசோதாவில் திருத்தம் வேண்டும் என்று கூறி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். திமுகவின் கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள் இவரின் செயலுக்கு நாடாளுமன்றத்திலேயே அதிருப்தி தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications