வந்தாச்சு தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி.. எப்போது முதல்?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகளுக்கு தமிழக சுற்றுலாத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த விற்பனை அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தொடங்குகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவைதான். இதையும் தாண்டி மிக முக்கியமானது பட்டாசு.
புது துணி இல்லாமல் கூட சிலர் தீபாவளியை கொண்டாடுவர், ஆனால் பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்ப மாட்டார்கள். ஆண்டுதோறும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி ஆங்காங்கே கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

பட்டாசுகள்
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது. சிவகாசியில் பாதுகாப்பான வகையில் தயார் செய்யும் பட்டாசுகளுக்கு போட்டியாக போலியாக தயாரிக்கப்படும் சீன பட்டாசுகளும் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி பட்டாசு விற்பனை பாதிக்கப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள்
சிவகாசி பட்டாசுகள் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் அவை வெடிப்பதற்கு பாதுகாப்பானவை. ஆனால் சீன பட்டாசுகள் விலை குறைவுதான். ஆனால் அதில் ஆபத்துகள் நிறைய இருக்கின்றன. அது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது அல்ல. எனவே சீன பட்டாசுகளை தவிர்க்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

15 நாட்கள்
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11 ஆம்தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை பட்டாசு கடைகளில் விற்பனை இருக்கும். அதாவது 15 நாட்களுக்கு விற்பனை இருக்கும்.

பட்டாசு கடைகள்
பட்டாசு கடைகளை அமைக்க உரிமையாளர்களுக்கு சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகளை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications