Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரெடிட் கார்டு இருக்குல்ல.. ஆன்லைனில் ஆக்டிவேஷன்.. ஆஹா, அலர்ட் ஆயிருங்க.. ராணிப்பேட்டையில் பாருங்க

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: புது புது ஆன்லைன் மோசடிகள் பெருகி வரும்நிலையில், இன்னொரு மோசடி ராணிப்பேட்டையில் நடந்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளதுடன், பொதுமக்களுக்கு 'உதவி எண்' ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி, ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.. இதனால் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் ஏமாறுகிறார்கள்.. அதனால்தான் சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியும், எச்சரித்தும் வருகிறது.

Credit Card credit card Activation Ranipet

வார்னிங்: வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

அதுமட்டுமல்ல, "பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே மாட்டார்கள்.

சைபர் கிரைம்: அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால் எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று சைபர் கிரைம் போலீசாரும் அறிவுறுத்தியபடியே உள்ளனர். நேற்றுகூட, ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்திருந்தனர்.. அதாவது, கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி நடந்து வருகிறதாம்.

"சார்.. உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் நான் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள்" என்று சொல்லி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால், மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து, அதிலுள்ள பணத்தை சுருட்டி விடுகிறார்களாம்..

Credit Card credit card Activation Ranipet

அறிவுரை: எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விடவேண்டும், தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள்" என்கிறார்கள் போலீசார்.

இப்படித்தான் ராணிப்பேட்டையிலும் ஒரு மோசடி நடந்துள்ளது.. அதாவது, கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வதாக சொல்லி இந்த மோசடி நடந்துள்ளது.. ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் ஆசிஷ் ஜெயின். இவரது செல்போனுக்கு கடந்த 3ம் தேதி, வங்கியிலிருந்து பேசுவதாக சொல்லி மர்மநபர் பேசியிருக்கிறார். வங்கி மூலமாக பெற்ற கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றும் சொன்னாராம்.

ராணிப்பேட்டை:
உடனே இதை நம்பிய ஆசிஷ் ஜெயின், தன்னுடைய வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி நம்பரையும் அவரிடம் சொல்லியிருக்கிறார். அடுத்த சில நிமிடத்தில், ஆசிஸ் ஜெயினின் வங்கி கணக்கிலிருந்த ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 905 எடுக்கப்பட்டதாக, அவரது செல்போனுக்கு மெசேஜ் வெந்துவிட்டதாம். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிஷ் ஜெயின், ராணிப்பேட்டை எஸ்பி ஆபீசுக்கு புகார் அளித்தார்.

உடனடியாக, சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரின் வங்கி கணக்கிலிருந்த பணத்தை, யாரும் பயன்படுத்தாதவாறு முடக்கி வைத்தனர்.

இதுதான் நம்பர்: பிறகு, இதையடுத்து, ஆசிஸ் ஜெயின் இழந்த பணத்தை மீட்டு அவரது வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையை, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி குமார் வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உடன் இருந்தார். சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்க வேண்டுமானால், 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+