அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் அஸ்வின் பயிற்சி..ஆட்ட நாயகர்களுக்கான வேட்டை.. உதய் பாராட்டு
சென்னை: இந்த திராவிட மாடல் ஆட்சி சைலண்ட் ஆகப் பல முன்மாதிரியான திட்டங்களை அமைதியாகச் செய்து வருகிறது. குறிப்பாகச் சொன்னால், பள்ளிக் குழந்தைகளுக்கு இது பொற்காலம்.
சென்னை முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டுத் திறமைக்கு முறையாகத் தீனி போட ஒரு அற்புதமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.

அதாவது CITIIS project (City Investments to Innovate, Integrate and Sustain) மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கிரிக்கெட் திறமையை முறையாக நெறிப்படுத்துவதற்காக Gen Next Cricket Academy உடன் இணைந்து சென்னை மாநகராட்சி 'திறமையாளர்கள் வேட்டை'யை நடத்தி வருகிறது.
அப்படி அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தலைமையில் முறையாகப் பயிற்சி கொடுத்து அவர்களை வருங்காலத்தில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களாக வளர்த்தெடுக்கத் திட்டம் வகுத்துள்ளது.

இந்தத் திறமையாளர் வேட்டை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட்டு, இறுதியாக 30 பேர்களை மட்டும் தேர்வு செய்யும் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அடிமட்ட அளவிலிருந்து பல மாணவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
இத்திட்டம் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், "நம்முடைய ஜென் நெக்ஸ்ட் அகாதெமி கிக்கெட் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி சென்னை அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களில் யாருக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தக் குறிப்பிட்ட மாணவர்களுக்குள் போட்டி வைத்து அதில் குறைந்தது 30 பேர்களைத் தேர்வு செய்துள்ளது.
அப்படித் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு முறையான பயிற்சியை அளித்து, அவர்களை வருங்காலத்தில் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாக உருவாவதற்கு இப்போதே தயார் செய்து வருகிறது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கு தலைமையேற்று இருக்கிறார் வீரர் அஸ்வின்.

நானும் ஒரு கிரிக்கெட் ஆர்வலர். ஆகவே, அந்த மாணவர்களுடன் இணைந்து நானும் விளையாடினேன். அவர்களுக்குப் பந்து வீசுவது, ஃபீல்டிங் செய்வது என நானும் களத்தில் இறங்கிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடினேன். அது மனதிற்கு மிக உற்சாகமாக இருந்தது. அதற்கு வாய்ப்பளித்த அஸ்வினுக்கு நன்றி" என்கிறார்
இந்தத் திட்டத்தைக் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், "இன்றைக்கு நாங்கள் இந்தத் திட்டத்தின் மூலமாகப் பயிற்சி அளிக்கின்ற மாணவர்கள், எதிர்காலத்தில் இந்திய அணியில் கூட விளையாடலாம். அந்தக் கனவு ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்" என்கிறார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அஸ்வின் இணைந்து கொண்டது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இதற்கான முயற்சியை நண்பர் அஸ்வின்தான் முன்னெடுத்தார். அவர் இல்லை என்றால் இத்திட்டம் இல்லை. அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
இதைச் செயல்படுத்துவதற்காக அவர் பல ஆண்டுகளாக முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஆட்சியில் அவரது ஆசை நிறைவேறி உள்ளது" என்கிறார் ரத்தின சுருக்கமாக.

"ரவிச்சந்திரன் அஸ்வின் போல எனக்கும் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் நான் விளையாடுவேன்" என்கிறார் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற ஒரு பள்ளி மாணவர்
"படிப்பில் மட்டுமே மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள் அல்ல. ஆல்ரவுண்ட் டெவலப்மன்ட்டில் ஸ்போர்ட்ஸ் ரொம்பவே முக்கியம். பலர் பின்தங்கிய பகுதியில் கிரிக்கெட் மீது கனவுடன் இருக்கிறார்கள். அதில் ஈடுபடவும் செய்கிறார்கள்.

ஆனால், முறையாக அவர்கள் மேலே வருவதற்கான வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆகவேதான் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மற்றும் பலரது ஒத்துழைப்பின்படி இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான விளையாட்டு உபகரணங்களைத் தரமாக வாங்கி தந்துள்ளோம்.
வெறுமனே உபகரணங்களை மட்டும் வாங்கி கொடுத்துவிட்டால், அவர்கள் வருங்காலத்தில் பெரிய வீரர்களாக வந்துவிடமாட்டார்கள். அதையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தரமான பயிற்சியாளரையும் நியமித்துள்ளோம்" என்கிறார் மாணவர்களுடன் ஆடிக்கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

இந்தப் பயிற்சித் தேர்வுக்காக வந்திருந்த பல பிள்ளைகள் மிகவும் பின் தங்கிய குடும்ப பின்புலத்தைக் கொண்டவர்கள். அவர்களின் முகமே அதைச் சொல்கிறது. இந்த எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கும் அரசாங்கம் சார்பாக முறையாகப் பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது ஒரு சிறப்பான செயல்.
"எங்கள் ஸ்கூலுக்கு ஜென் நெக்ஸ்ட் அகாதெமி சார்பாக வந்திருந்தார்கள். கிரிக்கெட் ஆடும் மாணவர்களைத் தேர்வு செய்து கோட்சிங் கொடுக்க, போட்டி நடத்தினார்கள். அதில் நான் வெற்றிபெற்றுத் தேர்வாகி இருக்கிறேன். பவுலிங்கில் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் ஒரு பள்ளி மாணவர்.

நுங்கம்பாக்கம் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பல மாணவர்கள் தங்களின் திறமையைப் போட்டிப் போட்டு வெளிப்படுத்தினார்கள். அதில் இறுதியாக 30 பேரை அகாதெமி தேர்வு செய்துள்ளது. இந்த 30 பேரிலிருந்து வருங்காலத்தில் நமக்கு ஒரு தினேஷ் கார்த்திக்கோ அல்லது அஸ்வினோ, முரளி விஜய்யோ கிடைப்பார்கள். அதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பைத் தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எங்கள் மாநகராட்சி சார்பாகவும் இந்தப் பிள்ளைகள் சார்பாகவும் மிகப் பெரிய நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்கிறார் நம்முடன் மீண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.
கனவு காண்பது சுலபம். அதைச் செய்து காட்டுவது கடினம். அதிலும் திராவிட மாடல்தான் முன்னோடி.















Click it and Unblock the Notifications