பப்ஜி மதன், மனைவிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்.. 1,600 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்.. போலீஸ் அதிரடி!
சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசி பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்று யூடியூபர் பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பப்ஜி மதன்
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இருவரும் ஆன்லைன் 'பப்ஜி விளையாட்டு மூலம் பல கோடிகள் சம்பாதித்ததும், சொகுசு கார், வீடு வாங்கியதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது. பப்ஜி மதனின் 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கணக்குகளும் பப்ஜி மதனின் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.

குண்டர் சட்டம்
இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த கிருத்திகா தனது கணவர் எந்த சொத்துக்களும் சேர்க்கவில்லை என்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார். தற்போது பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நாட்களுக்கு முன்பு அறிவுரைக் கழகத்தில் பப்ஜி மதனும், அவரது மனைவியும் வாதாடினார்கள்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த நிலையில் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைமத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றபத்திரிகையில் முதல் குற்றவாளியாக பப்ஜி மதனும், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மதன் மற்றும் அவரது மனைவிக்கு மனைவிக்கு எதிராக 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பணமோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தண்டனை
நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிந்தவுடன் அந்த தகவல்களை வைத்து கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மதனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். ஆதாரங்களை வைத்து மதனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications