பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்! டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு வைத்த முக்கிய டிமாண்ட்!
சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குஷ்பு, பெண்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தொடர்ந்து போராடுவேன் என்றும் விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் தாம் அஞ்சப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

குடும்ப வன்முறை உட்பட பெண்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், தன்னிடம் தாராளமாக தெரிவிக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு கடிதம் எழுதலாம், மெயில் அனுப்பலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டதாகவும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியுடனும் டிஜிபி அலுவலகம் சென்றார் குஷ்பு.
சைலேந்திர பாபு இல்லாததை அடுத்து ஏடிஜிபி சங்கரை நேரில் சந்தித்து பேசிய குஷ்பு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து கார் ஏறச் சென்ற குஷ்புவிடம் மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை வீசினர்.
அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக கூறிய அவர் மேற்கொண்டு அது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications