25 முறை.. பாட்டிலால் முகத்தை கிழித்த கொடூரன்.. பெண்ணுக்கு 25 தையல்.. உடம்பெல்லாம் காயம்.. ஐயோ சென்னை
காதலியை தாக்கி பீர் பாட்டிலால் முகத்தை குத்தி கிழித்துள்ளார் சென்னை இளைஞர்
சென்னை: 22 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
கேரள மாநிலம் ஆம்பூரி அருகே உள்ளது கர்த்தனக்கல் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சோனு ஜோசப்.. 20 வயதாகிறது.. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறார்.
இவருக்கு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை கிடைத்தது. அதனால், கீழ்ப்பாக்கம் பகுதியிலேயே ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை செய்து வந்தார்.

ரிசப்ஷனிஸ்ட்
சம்பவத்தன்று சோனு ஜோசப், டியூட்டி முடித்துவிட்டு, ஹாஸ்டல் ரூமுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சோனு ஜோசப்பை திடீரென வழிமறித்தார்.. தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும்படி நடுரோட்டிலேயே தொந்தரவு செய்தார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனு ஜோசப், அந்த நபரின் காதலை ஏற்ற மறுத்துவிட்டு, வேகவேகமாக ஹாஸ்டலுக்கு நடந்து சென்றார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மறுபடியும் சோனு ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..

கண்ணாடி பாட்டில்
பிறகு, கையில் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, சோனு ஜோசப் தலையில் ஓங்கி அடித்தார்... இதில் நிலைகுலைந்த சோனு ஜோசப், அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர், உடைந்த பீர் பாட்டிலால் சோனு ஜோசப் முகத்தில் சரமாரியாக குத்தி குத்தி கிழித்தார்.. மேலும், வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளிலும் குத்தி காயங்களை ஏற்படுத்தினார்... இதை ரோட்டில் நடந்த சென்றவர்கள் பார்த்து அலறினர்.. சோனு ஜோசப்பிற்கு உதவி கேட்டு கதறினார்கள்.. பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியதை கவனித்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..

25 தையல்கள்
உடம்பெல்லாம் கிழிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சோனு ஜோசப்பை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர்... முகத்தில் மட்டும் அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டுள்ளன.. உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.. மருத்துவமனை கொடுத்த தகவலின் படி கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேவியில் வேலை
உடனடியாக, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் அந்த இளைஞரின் செல்போன் சிக்னல் ஆராயப்பட்டு, அடுத்த சிறிது நேரத்திலேயே அவரை கைது செய்தனர் போலீசார்.. அந்த இளைஞர் சென்னையை சேர்ந்தவர்.. நவீன் என்பது பெயர்.. 25 வயதாகிறது.. சோனு ஜோசப்பும், நவீனும் கடந்த 6 மாதங்களாக பேஸ்புக் மூலம் பழகி உள்ளார்கள்.. இந்த பழக்கம் காதலாகி உள்ளது.. கடற்படையில் வேலை செய்வதாக நவீன் சோனுவிடம் சொன்னாராம்.. ஆனால் நவீன் கடற்படையில் வேலை செய்யவில்லை... கடற்படையில் பணியில் சேர முயற்சி மட்டுமே செய்து வருகிறார்..

ஏர்ஹோஸ்ட்
நவீன் பெரிய பதவியில் இருப்பதால், அவருக்கேற்றவாறு தன் தகுதியையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சோனு, சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்துள்ளார்.. அந்த வேலையையும் நவீன்தான் ஏற்பாடு செய்து தள்ளார்.. அதற்குபிறகுதான் கடற்படையில் நவீன் வேலை செய்யவில்லை என்ற உண்மையை தெரிந்து அதிர்ந்து போனார்.. இப்போதே இவ்வளவு பொய் என்றால், மற்ற விஷயங்களிலும் ஏமாற்றக்கூடும், காதலில் நம்பிக்கைதானே முக்கியம் என்று சொல்லி, நவீனுடன் பேச மறுத்துள்ளார் சோனு.. இதுதான் இவர்களுக்குள் கடும்வாக்குவாதமாக வெடித்துள்ளது..

சீரியஸ்
பொய் சொல்லும் நபருடன் இனி நான் பேசமாட்டேன், மீறி தொந்தரவு செய்தால் போலீசில் புகார் அளித்துவிடுவதாக சோனு சொன்னாராம்... மேலும், ஏர்ஹோஸ்டஸ் அதாவது விமான பணி பெண்ணாக வேலையில் சேர வேண்டும் என்று அதற்காகவே சில மாத காலமாக படித்தும் வருகிறாராம்.. வேலை கிடைக்கும் திமிரில் தன்னை கழட்டிவிட்டதாக நினைத்துள்ளார் நவீன்.. அழகாக இருந்தால்தானே அந்த விமான பணி பெண்ணாக போக முடியும்? அதனால்தான், முகத்தை பீர் பாட்டிலால் பலமுறை குத்தி கிழித்துவிட்டதாகவும், உடம்பெல்லாம் கொடூரமாக பாட்டிலால் குத்தியதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார் நவீன்.. அந்த பெண் இப்போது சீரியஸாக இருக்கிறாராம்..!!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications