"விருகம்பாக்கம்" வினோதினியை பாத்தீங்களா.. வீட்டுக்குள்ளேயே "கமுக்கமா" பகீர்.. பாவம் அந்த வேல்முருகன்
கணவரை காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தி கொன்று கொலை செய்த மனைவி கைதானார்
சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர் கேகே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.. மனைவி பெயர் வினோதினி.. இவர் அக்கம் பக்கம் வீடுகளில், வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
வேல்முருகன் தினமும் தண்ணி அடிப்பாராம். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதே போதையில்தான் வருவாராம்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு விடுவார்..

காய்கறி கத்தி
அந்தவகையில், கடந்த 9-ந்தேதியும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் வேல்முருகன்.. இதனால் ஆத்திரம் அடைந்த வினோதினி, கணவனை கண்டித்தார்... அப்போது இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வினோதினி, பக்கத்தில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, வேல்முருகனை குத்திவிட்டார்.. 2 முறை ஆவேசமாக குத்தினாராம்.. இதில் வேல்முருகன் படுகாயமடைந்துள்ளார்.. ரத்தம் கொட்டி உள்ளது.. ஆனால், இதை பார்த்து வினோதினி பயந்துவிட்டார்.

ஆம்புலன்ஸ்
உயிருக்கு ஆபத்தான நிலையில் வேல்முருகன் இருப்பதை பார்த்ததுமே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை.. அதனால், வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.. ஆனால், உயிருக்கு போராடிய நிலையிலேயே வேல்முருகன், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.. இதற்கு பிறகுதான், அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்... அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றார்..

வேல்முருகன்
தானாகவே கத்தியால் குத்திக்கொண்டால், அந்த அளவுக்கு ஆழமாக கத்திக்குத்து விழுந்திருக்காது என்பதால், டாக்டர்கள் சந்தேகமடைந்தனர்.. உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வினோதினியிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.. வினோதினி போலீசாரிடம் சொல்லும்போது, "என் கணவர் வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்தார்... வீட்டை அசுத்தமும் செய்து விடுவார்.. இதனால் விரக்தி அடைந்த நான், கணவரை கத்தியால் குத்தினேன்.

சிக்கிட்டேன்
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்திருந்ததால், அவரால் சத்தமாக அலற முடியவில்லை.. அவரது அலறல் சத்தமும் வெளியே கேட்கவில்லை... உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்ததுமே எனக்கு பதற்றமாகிவிட்டது.. சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து, நானே சிகிச்சை தந்தேன்.. ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்துகொண்டேயிருந்தது.. இதில்தான், என் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்" என்றார்.. இதையடுத்து போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.. இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications