Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோ எடுத்து அனுப்பு.. குழந்தையை தாக்கியதை ரசித்த ஜோடி.. பரபர வாக்குமூலம்.. கைதாகிறார் கள்ளகாதலன்

துளசியின் கள்ளக்காதலனை கைது செய்ய விரைந்தது தனிப்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்துள்ளது மோட்டூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த வடிவழகனின் மனைவி துளசி, தன்னுடைய குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ கடந்த 2 நாட்களாகவே தமிழக மக்களை உறைய செய்து வருகிறது.

இப்போது துளசி கைதாகி உள்ளார்.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துளசி பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.. அதைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போய்விட்டனராம்..

மகன்கள்

மகன்கள்

துளசிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். முதல் குழந்தை கோகுலுக்கு 4 வயதாகிறது.. 2 வயதான இரண்டாவது குழந்தை ஆபரேஷன் மூலம் பிறந்தது... டெலிவரிக்கு பிறகு துளசி கொஞ்சம் குண்டாகிவிட்டாராம்.. அதனால்தான், அந்த 2வது குழந்தை மீது ஒருவித எரிச்சலும் கோபமும் இருந்துள்ளது.

 வீடியோ

வீடியோ

இப்படிப்பட்ட சூழலில்தான், துளசிக்கு பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஒரு செல்போன் கால் வந்துள்ளது.. பிரேம்குமார் சென்னையை சேர்ந்தவர்.. நாளடைவில் இந்த செல்போன் பேச்சு, கள்ளக்காதலாக மாறியது.. துளசியின் கணவர் வேலைக்கு போய்விட்டால், இவர்கள் செல்போன் மூலம் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

 வீடியோ கால்

வீடியோ கால்

இந்த செல்போன் பேச்சு நாளடைவில் வீடியோ காலாக மாறியது.. துளசியை பார்த்ததுமே அழகாக இருக்கிறாய் என்று நெருங்கி பேச ஆரம்பித்துள்ளார் பிரேம்குமார்.. பிறகு, மூத்த மகன் கோகுலை பார்த்த பிரேம்குமார், "இந்த மகன் உன்னை போலவே அழகாக இருக்கிறான்.. 2-வது குழந்தை அசிங்கமா இருக்கு.. அது உன் கணவனை போலவே இருக்கு.. உன் அழகை குறைச்சதே இந்த 2வது குழந்தைதான்" என்று பிரேம்குமார் சொல்லி உள்ளார். ஏற்கனவே 2வது குழந்தை மீது வெறுப்பாக இருந்த துளசிக்கு, பிரேம்குமார் சொன்னதுமே, அந்த குழந்தை மீது வெறுப்பை அதிகமாக கொட்ட தொடங்கினார்.

 கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

அந்த குழந்தையை பார்த்தாலே எனக்கு பிடிக்கல.. ஒருநாள் அந்த குழந்தையை அடிப்பது போன்று வீடியோ எடுத்து எனக்கு அனுப்பு என்று பிரேம்குமார் துளசியை கேட்டுக் கொண்டாராம்.. ஏற்கனவே கள்ளக்காதலனின் இனிப்பு பேச்சில் மயங்கிய துளசி, தான் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி குழந்தையை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.. அதை வீடியோவாக அவரே செல்போனில் ரெக்கார்டு செய்து, அதை வாட்ஸ்அப் மூலம் பிரேம்குமாருக்கும் அனுப்பிவைத்துள்ளார்..

 காயங்கள்

காயங்கள்

இந்த வீடியோவை ஒரே சமயத்தில் 2 பேருமே பார்த்து பார்த்து ரசித்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, குழந்தைக்கு உடம்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்து கணவர் கேட்டாராம்.. கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டான், பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டான் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்யை சொல்லி தப்பித்துள்ளார் துளசி.. அதை நம்பிய கணவனும், குழந்தையை தினமும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை தந்துள்ளார்.

குழந்தை

குழந்தை

இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் பிரேம்குமார் இன்னொரு டிமாண்ட் வைத்துள்ளார்.. உன் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு வந்துடு.. உன்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரேம்குமார் சொன்னாராம்.. அதற்கான முயற்சியிலும் துளிசி ஈடுபடவும் இருந்தாராம்.. ஆனால் அதற்குள் குழந்தை விவகாரம் வெடித்து கிளம்பி விட்டது.. இவ்வளவும் துளசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.. எப்போதெல்லாம் குடும்ப பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் குழந்தையை தாக்கி வீடியோவை பிரேம்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணை

விசாரணை

அனைத்துக்கும் காரணம், கள்ளக்காதலன் பிரேம்குமார் என்பவர்தான் என்பதும், அவரது தூண்டுதலின் பேரில்தான் துளசி குழந்தையை அடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.. தனிப்படை போலீசார் பிரேம்குமாரை கைது செய்ய சென்னைக்கும் விரைந்துள்ளனர்... அநேகமாக இன்றைய தினம் பிரேம்குமார் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+