ஸ்பெஷலிஸ்ட் வீரர்.. இது மட்டும் நடந்தா சிஎஸ்கேவை தொடக்கூட முடியாது.. தோனி இறக்கும் மெகா அஸ்திரம்?
சென்னை: சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி நாளை நடக்க உள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி கோலாகலமாக துவங்க உள்ளது.
கிரிக்கெட் உலகில் இந்தியாவே கொண்டாடும் திருவிழாவான ஐபிஎல் நாளை துவங்குகிறது. பொதுவாக ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே முதல் போட்டி ஆடினால்.. முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்லும்.
அந்த வகையில்தான் இந்த வருடமும் சீஸனின் முதல் போட்டியில் நாளை சென்னை ஆடுகிறது. சென்னைக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையிலான மேட்ச் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாம்பியன்ஸ்
கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. தோனியிடம் கேப்டன்சியை கற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா, அவரின் ஸ்டைலிலேயே கடந்த முறை கேப்டன்சி செய்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில போட்டிகளை ஜடேஜா கேப்டன்சியில் ஆடியது. மொத்த சீசனில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் மோசமாக ஆடி வெளியேறியது. இந்த நிலையில்தான் நாளை நடக்கும் போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பிராவோ
சிஎஸ்கே அணியில் இந்த முறை பிராவோ கிடையாது. அதேபோல் பல இளம் வீரரக்ள் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் அணியின் காம்பினேஷன் மாறும். அதன்படி சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர்களாக ருத்துராஜ், தேவன் கான்வாய் ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளது. தேவன் கான்வாய் கடந்த சீசனில் பெரிதாக வாய்ப்பு பெறவில்லை. இதில் சிக்கல் என்னவென்றால் இரண்டு வீரர்களும் பவர் பிளேவில் அடித்து ஆட கூடிய வீரர்கள் இல்லை. தொடக்கத்தில் டைம் எடுத்துவிட்டு பின்னர் அடித்து ஆடுவார்கள். நீண்ட நேரம் களத்தில் நிற்க கூடிய வீரர்கள்.

ராயுடு
மிடில் ஆர்டரில் பெரும்பாலும் மொயின் அலி இறங்குவார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு இறங்குவார். சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் பின்னர் இறங்குவார். இதில் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் போட வாய்ப்பு இல்லை. அவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இறங்குவார். அவருக்கு காலில் காயம் உள்ளது. ஹர்திக் பாண்டியா எப்படி இரண்டு சீசன் பவுலிங் செய்யவில்லையோ அதேபோல் இவரும் பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்வார்.

ஸ்டாக்ஸ்
அவரை தொடர்ந்து தோனி, ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள். லோவர் ஆர்டரில் பவுலர்கள் ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாகர், பிரஷாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் நல்ல வலுவாகவே உள்ளது. ஸ்டோக்ஸை சேர்க்காமல் இரண்டு ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இது போக ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா, மொயினுக்கு உதவியாக சோலங்கி இருக்கிறார். ஆனால் பாஸ்ட் பவுலிங் இன்னும் அவ்வளவு நம்பிக்கை தரவில்லை. கடந்த சீசனில் பிரிட்டோரியஸ் சரியாக ஆடவில்லை.

சாகர்
கடந்த சீசனில் ஆடாத தீபக் சாகர் இந்த முறை காயத்திற்கு பின் பெரிய பிரேக் எடுத்து வந்துள்ளார். அவரின் ஸ்விங் இந்த முறை வேலை செய்யுமா என்ற கேள்வி உள்ளது. சிமார்ஜீத் பவுலிங் எடுபடும் பட்சத்தில் சிஎஸ்கே அணி மிக வலிமையான அசைக்க முடியாத அணியாக மாறும். தற்போது சிஎஸ்கேவில் மொயின், ஜடேஜா, பிரிட்டோரியஸ், தீபக் சாகர், பிரஷாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங் என்று 6 பவுலர்கள் உள்ளனர். இதனால் ஸ்டோக்ஸ் பவுலிங் போட வேண்டியது இல்லை. அவரும் பவுலிங் போடும் பட்சத்தில் சிஎஸ்கே அணி அசைக்க கூட முடியாத அணியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications