என்ன மனுசன்யா.. நோட் பண்ணுங்க தோனி.. சிஎஸ்கே வீரர்களை உருக வைத்த உத்தப்பா.. நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ராபின் உத்தப்பா செய்த காரியம் ஒன்றும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே இரண்டாம் இடம் வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெல்லும்பட்சத்தில் சிஎஸ்கே முதலிடம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இன்று கொல்கத்தா அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணியில் செய்யப்பட்ட மாற்றங்களால் அந்த அணி வலுவாக இருக்கிறது. இதனால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்குமா, உத்தப்பா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உத்தப்பா
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்டதற்காக உத்தப்பா மிகவும் சந்தோசமாக பேசி இருந்தார். தமிழில் சரளமாக பேட்டி அளித்து இருந்த உத்தப்பா சிஎஸ்கே அணியில் ஆட போவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிஎஸ்கே சிறப்பான ஐபிஎல் அணிகளில் ஒன்று. இதில் ஆட வேண்டும் என்று பல வருடமாக கனவு கண்டு கொண்டு இருந்தேன். தற்போது அணியில் வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை அணியில் எடுத்த சிஎஸ்கே அணிக்கு நன்றி.

ஐபிஎல்
எனக்கு ஐபிஎல் தொடரில் 1000 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று ஆசை. இந்த தொடரில் நான் அந்த சாதனையை செய்வேன் என்று நம்புகிறேன். எனக்கு சிஎஸ்கே அணிக்காக ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று ஆசை. ஓப்பனிங் பேட்டிங் செய்வதன் மூலம் அணியில் அதிக ரன்களை எடுக்க முடியும் என்று நம்புகிறேன் என்று உத்தப்பா குறிப்பிட்டார். கடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் உத்தப்பா மிகவும் சிறப்பாக ஆடினார்.

கேரளா
அந்த தொடரில் கேரளா அணிக்காக ஆடிய அவர், பல போட்டிகளில் 80+ ரன்களை எடுத்தார். இதனால் அவர் சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இதுவரை உத்தப்பாவிற்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கடந்த போட்டியில் உத்தப்பா செய்த்தாஹ் சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே உத்தப்பா
கடந்த போட்டியில் பெங்களூருக்கு எதிராக வென்ற பின் தோனியும், ரெய்னாவும் பெவிலியன் திரும்பிக்கொண்டு இருந்தனர். பெங்களூர் வீரர்களிடம் பேசியபடி தோனி மெதுவாக நடந்து வந்தார். அவர் கையில் பேட்டை சுமந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதால் ராபின் உத்தப்பா வேகமாக ஓடி சென்று, அவரின் பேட் மற்றும் ஹெல்மெட்டை வாங்கினார். அதன்பின் வேகமாக திரும்பி வரும் வழியில் ரெய்னாவின் பேட்டையும் வாங்கினார்.

ரெய்னா
இரண்டு பேரின் பேட்டையும் சுமந்து கொண்டு உத்தப்பா பெவிலியன் திரும்பினார். உத்தப்பாவும் தோனிக்கு இணையாக மூத்த வீரர். ஒரே சமயத்தில் இந்திய அணிக்காக ஆடியவர்கள். ஆனாலும் உத்தப்பா எந்த விதமான ஈகோவும் பார்க்காமல் அணி வீரராக சிறப்பாக செயல்பட்டு இப்படி செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு டீம் வீரர் இப்படித்தான் இருக்க வேண்டும். அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றெல்லாம் உத்தப்பா கவலைப்படவில்லை.

வைரல்
தோனி இதை எல்லாம் நோட் செய்ய வேண்டும். இப்போதாவது அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். உத்தப்பா சிறப்பாக ஆடி வருகிறார். சிஎஸ்கே கிட்டத்தட்ட பிளே ஆப் சென்றுவிட்டது. இனியாவது மூத்த வீரர்கள் யாருக்காவது ஓய்வு கொடுத்துவிட்டு உத்தப்பாவை களமிறக்க வேண்டும். மூத்த வீரர் என்ற வகையில் உத்தப்பாவிற்கும் உரிய வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications