4 முறையா? இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்
சென்னை: இன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடக்க போகும் போட்டியில் சிஎஸ்கேவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. தற்போது டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே இன்று பெங்களூரை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த போட்டியில் மும்பையை திரில் மேட்சில் சிஎஸ்கே வீழ்த்தியது.
இன்று பெங்களூரை வீழ்த்துவதன் மூலம் சிஎஸ்கே டேபிள் டாப்பராகும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் மோசமாக தோல்வி அடைந்த பெங்களூர் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சிறிய மாற்றம்
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் சிறிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிக்குள் மீண்டும் சாம் கரன் வந்துள்ளார். முதல் போட்டியில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. கொரோனா பயோ பபுள் தனிமைப்படுத்துதல் விதி காரணமாக சரியான நேரத்தில் இவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. போட்டி நடந்த நாளில்தான் சாம் கரன் அணியில் இணைந்தார் என்பதால் அவரை கடந்த போட்டியில் பிளேயிங் லெவனில் தோனி எடுக்கவில்லை.

சாம் கரன்
இந்த நிலையில் இன்று அணி தேர்வில் கண்டிப்பாக சாம் கரன் பரிசீலனை செய்யப்படுவார். அதே சமயம் கடந்த போட்டியில் அம்பதி ராயுடுவிற்கு மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்தவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டிக்கு பின் அம்பதி ராயுடுவிற்கு உடனடியாக ஸ்கேன் எடுக்கப்பட்டது. இவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும் காயம் பெரிதாக இருந்தது.

ராயுடு
இதனால் அவரால் சரியாக பயிற்சியும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே இன்று அம்பதி ராயுடு ஆடுவாரா என்பது சந்தேகம்தான். இன்னொரு பக்கம் கடந்த இரண்டு வருடமாக சாம் கரனா அல்லது பிராவோவா என்று பார்த்தால் தோனி சாம் காரனைத்தான் தேர்வு செய்கிறார். இதனால் கடந்த போட்டியில் பிராவோ நன்றாக ஆடினாலும் இன்று ஆடுவாரா என்பது சந்தேகம்தான். இரண்டு இடங்களுக்கு இந்த மூன்று பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஹர்ஷல் பட்டேல்
இன்று பெங்களூர் அணியில் ஹர்ஷல் பட்டேல் ஆடுகிறார். இவரின் ஓவரில் அம்பதி ராயுடு நான்கு முறை ஐபிஎல்லில் மட்டும் இதுவரை அவுட்டாகி உள்ளார். அதுவும் 36 பந்துகளில் அம்பதி ராயுடு 4 முறை ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அவுட்டாகி இருக்கிறார். ஹர்ஷல் பட்டேலுக்கு எதிராக 4 முறை சொதப்பிய காரணத்தால் இவரை எடுக்கும் வாய்ப்புகள் குறைவு. இன்று பெங்களூருக்கு எதிராக அம்பதி ராயுடு காயங்களுக்கு இடையில் இப்படி ரிஸ்க் எடுக்கப்பட்டு களமிறக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.

மாற்றம்
இதனால் பெரும்பாலும் அம்பதி ராயுடு இடத்தை சாம் கரன் நிரப்பும் வாய்ப்பு உள்ளது. பிராவோ எப்போதும் போல ஆடும் வாய்ப்பு உள்ளது. இன்று ரூத்துராஜ், டு பிளசிஸ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, சாம் கரன், தோனி, பிராவோ, ஷரத்துல் தாக்கூர், சாகர், ஹஸல்வுட் ஆகியோர் இன்று சிஎஸ்கே அணிக்காக ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications