கடலூரில் பூஜைக்கு கொடுத்த காசில் சரக்கடித்த கணவண்.. மனைவியின் ஒரு நிமிட தவறு.. தவிக்கும் குழந்தைகள்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கிராமத்தில் வசித்தவர் வேல்முருகன். இவரது மனைவி வள்ளி.. வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மது அருந்துவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பாராம். மேலும் மது குடிப்பதை எதிர்த்தால், மனைவியுடன் சண்டை போடுவாராம்.. இந்நிலையில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தில் மது குடித்துவிட்டு வந்தாராம் வேல்முருகன்.. இதை பார்த்த பொறுமை இழந்த மனைவி.. சில்வர் குடத்தால் கணவனை என்ன செய்தார் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
குடிப்பழக்கம் உடல், மனம் இரண்டுக்குமே நல்லது இல்லை..அதேபோல் குடிப்பழக்கம் ஒரே குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு பல உதாரணங்கள் நடந்துள்ளன. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் குடிப்பழக்கம் அழித்து விடுகிறது. குடிப்பழக்க தவறால் ஒரு நிமிட கோபம் குடும்பத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது. குழந்தைகளை அனாதைகளாக்கிவிடுகிறது.. அப்படி ஒரு சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் வேல்முருகனுக்கு 36 வயது ஆகிறது. இவர் மரம் வெட்டும் பணிகளை மேற்கொண்டு வந்த கூலித்தொழிலாளியாவர். இவரது மனைவி வள்ளி. வேல்முருகன் வள்ளி தம்பதிக்கு அய்யனார்(11), வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.
வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. அவர் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வேல்முருகனிடம் ரூ.1,000-ஐ வள்ளி கொடுத்தாராம். அதன்படி வேல்முருகனும் கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கினார். அதில் மீதம் இருந்த பணத்துக்கு அவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தாராம்.
பின்னர் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனது மனைவியிடம் பூஜை பொருட்களை கொடுத்துள்ளார். பொருட்கள் வாங்கியதுபோக மீதமுள்ள பணத்தை தருமாறு வள்ளி கேட்டார். அதற்கு அவர் செலவாகிவிட்டதாக கூறியிருக்கிறார். அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட வள்ளி அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.. மேலும் வேல்முருகனுக்கு சாப்பாடு கொடுக்காமல், அவரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வள்ளி இரவில் தூங்கிவிட்டார். வேல்முருகன் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கியிருக்கிறார்.
நேற்று காலையில் எழுந்த வள்ளி, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். இதைகண்ட வேல்முருகன், உடனடியாக வீட்டிற்குள் சென்று படுத்துக்கொண்டார். இதனிடையே பால் வாங்கிவிட்டு வந்த வள்ளி, கணவரிடம் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி, அங்கிருந்த சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். இதனிடையே தந்தை இல்லாத நிலையில், தாய் வள்ளி சிறைக்கு போனதால், அவரது 2 மகன்களும் பரிதவித்து போனார்கள். குழந்தைகள் இருவரும் அவர்களது பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டனர். குடிப்பழக்கமும், அதனால் ஏற்பட்ட சண்டையும் ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.
-
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications