தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. இன்று இரவு 9க்குப் பதில் நாளை காலை 5 மணி வரை தொடரும்
சென்னை: தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் 4 அல்லது 5 ஆவது வாரத்தில் அதிகமாக இருந்தது. அது போல் இந்தியாவிலும் ஏற்பட்டு அனைவருக்கும் வைரஸ் பாதிக்கக் கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது.
இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனாவை 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

புராதன சின்னங்கள்
அதன்படி இன்று காலை 7 மணி நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது. இது இரவு 9 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதோபோல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அனுமதி ரத்து
ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், வழிப்பாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், புராதன சின்னங்கள், மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அது போல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

நீட்டிக்க
கொரோனாவிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஜரூராக உள்ளன. இந்த ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுவையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 9 மணி வரை இருந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நீட்டிப்பு
பொதுமக்களின் நலன் கருதி இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளது. புதுவையில் வரும் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications