சி.வி.சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள்.. உடைகிறதா அதிமுக? தவெக விஜய்க்கு ஆதரவு தர திட்டம்?
சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணி க்கும் பெரும்பான்மை பலத்தை தமிழக மக்கள் கொடுக்கவில்லை. ஆனால், தனிப் பெரும் கட்சியாக 108 இடங்களை நடிகர் விஜய்யின் தவெகவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அந்த வகையில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேசமயம், தவெகவிலிருந்து ஒருவர் சபாநாயகர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும். அதனால் 108 என்பது 106 ஆக குறைந்து விடும். இதனால், பெரும்பான்மைக்கு இன்னும் தேவை 12 இடங்கள்.

காங்கிரஸிடம் எத்தனை எம்எல்ஏக்கள்
திமுக கூட்டணியிலுள்ள காங்கிரசிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தவெகவுக்கு ஆதரவு தருவதாக விஜய்க்கு உறுதி தரப்பட்டு உள்ளது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விஜய்யிடம் சொல்லி யிருக்கிறார் ராகுல்காந்தி. அதாவது, பாஜகவின் என்.டி.ஏ.கூட்டணியில் இருப்பவர்கள், தவெக கூட்டணி ஆட்சிக்குள் வந்தால், நாங்கள் ஆதரவு தர முடியாது என்பதுதான்.
காங்கிரஸ் ஆதரவு ஓ.கே. ! ஆனால், திமுகவில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகள், தவெகவுக்கு ஆதரவு தர முன்வரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, திமுக கூட்டணியிலேயே இருப்போம் என சொல்லியிருக்கிறார்கள். அதனால், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணி உடையாது
இந்த நிலையில் தான் அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவிடம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆதரவை பெற அன்புமணியிடம், தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி விவாதித்துள்ளார். ஆதரவு தர அன்புமணி ரெடி. ஆனால், அவர் வைக்கும் டிமாண்ட் , அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.
என்டிஏ கூட்டணி வேண்டாம்
அதேசமயம், இதனையறிந்ததால்தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிடம், என்.டி.ஏ.கூட்டணியின் ஆதரவை பெற்றால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என விஜய்யிடம் நிபந்தனை விதித்ததன் பின்னணி. ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணியில் (என்.டி.ஏ.) உள்ள பாமக ஆதரவுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால், தவெகவுக்கு 9 இடங்கள் தான் கிடைக்கிறது. மேலும் 3 இடங்கள் விஜய்க்கு தேவைப்படுகிறது.
அதிமுக உடைகிறது
இந்த சூழலில்தான், சில தொகுதிகளை மட்டுமே வைத்துள்ள கட்சிகளின் ஆதரவை கேட்பதை விட, நேரடியாக அதிமுகவின் ஆதரவை கேட்கலாம் என தீர்மானிக்கப்பட்டு சி.வி.சண்முகத்தை அணுகியுள்ளது தவெக!
எடப்பாடி பழனிச்சாமியை சமாளிக்க வல்லமை பெற்றவராகவும், தற்போது வன்னியர் சமூகத்தின் 15 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றவராகவும் சி.வி.சண்முகம் இருப் பதால் அவரை அணுகியுள்ளனர். குறிப்பாக, எஸ்.பி.வேலுமணியிடம் பேசி வரும் செங்கோட்டையன், ஆதரவு குறித்து விரிவாக விவாதித்த போது, என்னிடம் ஓரிரு எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நேரடியாக என்னால் அரசியல் செய்ய முடியாது. அதனால் சி.வி.சண்முகத்திற்குதான் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. அவரிடம் பேசுங்கள். நானும் பேசுகிறேன் என சொல்லியிருக்கிறார் வேலுமணி.
செங்குத்தாக உடையும் அதிமுக
இதனையடுத்தே, சி.வி.சண்முகத்திடம் செங்கோட்டையனும், வேலுமணியும் பேசியுள்ளனர். அவர்களின் விவாதம், அதிமுகவை செங்குத்தாக உடைத்து விட்டு அப்படியே தவெகவை ஆதரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை உடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துவிட்டார் சண்முகம்.
அப்படியானால், வேறு எந்த வகையில் ஆதரவு தர இயலும் என ஆலோசிக்கப்பட்டதில், அதிமுகவில் எடப்பாடியின் ஆளுமையை குறைக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவோம். அதன் மூலம் தவெகவை ஆதரிக்கலாம் என சண்முகம் யோசனை சொல்ல, நேற்று இரவு, சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி விவாதித்துள்ளனர். அப்போது, சட்டமன்ற அதிமுக தலைவராக சண்முகத்தை தேர்வு செய்வது என்றும், அவரது தலைமை யில் தவெகவை ஆதரிக்கலாம் என்றும் தீர்மானித்துள்ளனர். அதிமுகவின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் சண்முகத்தை ஆதரிப்பதால், இது நடைமுறைக்கு வரும் போது பெரிய அளவில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தாது. இதற்கிடையே, சண்முகம் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
- சிறப்பு நிருபர் எழில்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications